தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.16 ஆயிரம் கோடி நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள்: "பறிமுதல் செய்யும்படி", உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு
தேர்தல் பத்திரங்கள் மூலம் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் பெற்றிருந்த 16,000 கோடி ரூபாய் நன்கொடை பணத்தை பறிமுதல் செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் திட்டத்தை 2018-ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. எனினும் அந்தத் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அதை கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை தொடர்ந்து "அந்தப் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற ரூ.16,518 கோடி நன்கொடையைப் பறிமுதல் செய்ய வேண்டும், அக்கட்சிகளின் வருமான வரி மதிப்பீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்று கெம் சிங் பாட்டீ என்பவா் உள்பட பலர் மனு தாக்கல் செய்தனர்.
நன்கொடை அளித்தவா்களுக்கு அரசியல் கட்சிகள் மூலம் கிடைத்த சட்டவிரோத பலன்கள் குறித்து உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்களின் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: வசதியானவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகையை ரத்து செய்வதே உண்மையான சமத்துவம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகள் மற்றும் நன்கொடை அளித்தவர்கள் பரஸ்பரம் பலன் அடைந்ததாக ஊகத்தின் அடிப்படையிலேயே மனுக்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்தப் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடையைப் பறிமுதல் செய்தல், வருமான வரி மதிப்பீட்டை மறுஆய்வு செய்தல் ஆகியவை வருமான வரி அதிகாரிகளின் அதிகார வரம்புக்குள்பட்ட நடவடிக்கைகளாகும்’ என்று தெரிவித்து, அந்த மனுக்களை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மறு ஆய்வு மனு
முன்னாள் தலைமை நீதிபதி டிவைஸ் சந்திர சூட் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரை கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மனுதாரருக்கு குற்றவியல் நடைமுறை அல்லது அரசியலமைப்பின் 226 வது பெறுவீர்கள் பொருத்தமான மன்றத்தில் அணுகுவதற்கு மாற்று வழி இருப்பதாகவும் அந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் கெம் சிங் பாட்டீ நேற்றுமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், தேர்தல் நிதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் பொதுவெளியில் (தேர்தல் ஆணைய வலைதளத்தில்) வெளியிடப்பட்டது.
இந்தத் தகவல்கள் மூலம் நன்கொடை அளித்தவா்களும், அரசியல் கட்சிகளும் பரஸ்பரம் பலன் அடைந்தனா் என்பது தெளிவாக தெரிகிறது. எனவே ரூ.16,518 கோடி நன்கொடையைப் பறிமுதல் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தேர்தல் பத்திர திட்டத்தை செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. அப்படியானால் அந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து செல்லாதது ஆகிவிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில் அந்தத் திட்டத்தின் கீழ் பெற்ற நன்கொடைகளை பறிமுதல் செய்திருக்க வேண்டும்.அப்படி பறிமுதல் செய்யும்படி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்திருக்கக் கூடாது. எனவே அந்த மனுக்களை தள்ளுபடி செய்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதிய உத்தரவை உச்சநீதிமன்ற மறு ஆய்வு செய்ய வேண்டும். இந்த உத்தரவை திரும்ப பெற்று புதிதாக விசாரணை நடத்த வேண்டும்".
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதன் மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: " சட்டம் இயற்றப்பட்ட பிறகும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?