×
 

அந்த நடிகரெல்லாம் துணை முதல்வரா..? நினைக்கவே சங்கடம்.. பிரகாஷ் ராஜ் கடும் கோபம்..!

எந்தவித  ஒளிவு, மறைவும்  இல்லாமல் தனது கருத்துக்களை வெளிப்படையுடன் கூறி உறுதியாக நிற்பார்.

பவன் கல்யாண் ஆந்திராவின் துணை முதல்வர் என்று நினைப்பது கூட தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக பிரகாஷ் ராஜ் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தார்.

நடிகரும், அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் தனது அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது அவருக்கே உரிய வழியை கையாண்டு வருகிறார். எந்தவித  ஒளிவு, மறைவும்  இல்லாமல் தனது கருத்துக்களை வெளிப்படையுடன் கூறி உறுதியாக நிற்பார்.

ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து அதனை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது,''பவன் கல்யாண் ஆந்திராவின் துணை முதல்வர் என்று நினைப்பது கூட எனக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. பவன் கல்யாணுக்கு சமூக சூழ்நிலைகள் பற்றிய எந்த புரிதலும் இல்லை. அவர் செய்வதெல்லாம் சனாதன தர்மத்தை உருவாக்கி செயல்படுத்துவது, அவரது அரசியல் மைலேஜைத் தேடுவது மட்டுமே.

இதையும் படிங்க: வைரலாகும் GHIBLI டிரெண்டிங்... வரிசை கட்டி நிற்கும் அரசியல் பிரபலங்கள்!

முன்னதாக பேசிய பவன் கல்யாண்,  ''வேலையின்மை, மோசமான சாலைகள், பிற சமூகப் பிரச்சினைகள் போன்ற பிற முக்கியப் பொறுப்புகளை எதிர்கொள்வதாக'' தெரிவித்து இருந்தார். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள்ள பிரகாஷ் ராஜ், "ஆந்திரப் பிரதேசம் முழுவதும் சமூக மற்றும் அடிப்படை மட்டத்தில் பல பிரச்சினைகளுடன் போராடி வரும் நிலையில், இந்த பவன் கல்யாண் பொருத்தமற்ற தலைப்புகளைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன? சமூக பொதுக் கொள்கை வகுப்பதில் அவருக்கு உள்ள புரிதல் இல்லாததால் இது வருகிறது.

இந்த விஷயத்தில் பேசுவது கூட நேரத்தை வீணடிக்கிறார். கடந்த ஆண்டுகளில் பெங்களூரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சீனியர் நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண், இதுபோன்ற திறமையற்ற செயல்களால் தனது சொந்த நேரத்தை வீணடிக்கிறார்'' எனத் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: அரசியலில் அண்ணாமலையின் எதிர்காலம் என்ன?- கணித்துச் சொன்ன பவன் கல்யாண்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share