இது நிதிஷின் கடைசி இன்னிங்க்ஸ்..! பிரசாந்த் கிஷோர் சொல்லும் புது ரூட்..!
இன்னும் 5 மாதங்கள் தான் நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக இருப்பார் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா, 2025 பிஹார் சட்ட மன்ற தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் என்றும் அறிவித்தார். தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கோட்டையாக உள்ள ரகோபூர் தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளதாகவும், கட்சி முடிவு செய்தால், நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: நிதிஷ் குமாரை துணைப் பிரதமராக்க வேண்டும்... பாஜகவில் கிளம்பிய பகீர் குரல்..!
தேஜஸ்வி யாதவுக்கு எதிராக ரகோபூரில் இருந்து போட்டியிட வேண்டும் என தனது கட்சி விரும்பினால் நான் போட்டியிடுவேன் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.மேலும், பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொரோனா கால ஆட்சியால் மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர் என்று கூறிய அவர், நிதிஷ்குமார் தனது கடைசி அரசியல் இன்னிங்சில் இருப்பதாக விமர்சித்தார்.பா.ஜ.க. ஒருபோதும் நிதிஷ்குமாரை மீண்டும் முதலமைச்சராக விடாது என்று அறுதியிட்டு கூறிய பிரசாந்த் கிஷோர், பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்காது என திட்டவட்டமாக கூறினார்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் சரி, நிதிஷ்குமார் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது என்றும் அவர் பீகாரின் முதலமைச்சரகா 5 மாதங்கள் மட்டுமே இருப்பார் எனவும் தெரிவித்தார்.bஅரசு நிர்வாகத்தில், நிதிஷ் குமார் செயலிழந்து விட்டார் என்றும் அதிகாரிகளும், நெருங்கிய அரசியல் நண்பர்களும் சேர்ந்துதான் ஆட்சியை நடத்துவதாகவிம் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதே அவருக்கு தெரியாது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பீகாரில் நிதிஷுக்கு பெரும் அடி..! 15 முஸ்லிம் தலைவர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா..!