×
 

மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் சிக்கல்... பட்டியலுடன் வந்த புஸ்ஸி ஆனந்த்... நிராகரித்த விஜய்

மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக ஒரு தகவல் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் கோபமடைந்த விஜய் கூட்டத்திற்கு வர மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக ஆடியோ வெளியான விவகாரத்தில் விசாரணையில் இறங்கிய விஜய் தனித்தனியாக நிர்வாகிகளை அழைத்து விசாரித்துள்ளார். இதில் பலரும் தயங்கியப்படி சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகிகள் நியமனத்தில் புஸ்ஸி ஆனந்த ஆதாயம் பார்ப்பதை ஆதாரத்துடன் நிர்வாகிகள் சிலர் தயங்கியப்படி கூறியுள்ளனர். அதுகுறித்து விசாரிப்பதாக விஜய் சொல்லி அனுப்பியுள்ளார். பின்னர் வேட்பாளர் தேர்வில் மாநிலம் முழுவதும் புஸ்ஸி ஆனந்த் வைத்துள்ள டிமாண்ட் குறித்தும் பலரும் விஜய்யிடம் சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தாராம். 

மாவட்டம் முழுவதும் நிர்வாகிகள் நியமனத்தில் மாவட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப நிர்வாகிகளை நியமித்து கட்சியின் வளர்ச்சியை பார்க்காமல் கவனிப்பவர்களுக்கு மட்டுமே பதவி என்பதால் பல மாவட்டங்களில் கட்சியினர் விரக்தியில் இருப்பதும் விஜய் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நியமனத்தில் நடந்த குளறுபடியால் புஸ்ஸி ஆனந்த் மீது கடும்கோபத்தில் அங்குள்ள கட்சியினர் உள்ளதும் விஜய்யின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நிறுத்தியது ஏன்? தவெக தலைவர் விஜய் கேள்வி...


புஸ்ஸி ஆனந்த தவிர மற்ற நிர்வாகிகள் செயல்படாமல் தடுக்கப்பட்டதும், சில நிர்வாகிகளை வசூல் வேட்டைக்கு பயன்படுத்தியதும் அவரது கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டதை குறித்துக்கொண்டாராம் விஜய். வழக்கறிஞர் அணி நியமனத்தில் ஆதாயம் பெற்றதாக ஆதாரத்துடன் விஜய்யிடம் நிர்வாகிகள் கொடுத்ததாகவும் பொறுமையுடன் கேட்டுக்கொண்ட விஜய் உரிய முடிவெடுப்பதாக அவர்களை அனுப்பி வைத்தாராம். 
இதற்கிடையே மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பட்டியல் தயாரிப்புடன் வந்த புஸ்ஸி ஆனந்திடம் முகம் கொடுத்து பேசாத விஜய் கூட்டத்தை நடத்துங்க நான் வரவில்லை, அடுத்தவாரம் சந்திக்கிறேன் என்று சொன்னதால் முகம் வாடிப்போய் வந்ததாக சொல்கிறார்கள். ஒரு வாரத்தில் விஜய் மேலும் கூடுதல் தகவல்களை சேகரித்து பின் களத்தில் இறங்குவார் என தெரிகிறது. இன்று நடந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விஜய் பங்கேற்காததற்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.

இதையும் படிங்க: திராவிட மாடல் ஆட்சி ..வார்த்தைக்கு பின்னால் இருக்கும் சரித்திரம் ..மேடையில் புட்டுப்புட்டு வைத்த திமுக எம்.பி கனிமொழி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share