"பெருமைமிகு 75 ஆண்டுகள்" : குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
நமது நாடு குடியரசாகி, பெருமைமிக்க 75 ஆண்டுகளை கடந்து வந்திருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டு இருக்கிறார்.
நாடு முழுவதும், 76 வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' வலைத் தளத்தில் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
அதில், "அரசியலமைப்பின் லட்சியங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்தவும், வளமான இந்தியாவை நோக்கி உழைக்கவும் விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் அவர், " நாட்டு மக்களுக்கு குடியரசு தின இனிய நல்வாழ்த்துக்கள். இந்தியா குடியரசு நாடாக மாறி புகழ்பெற்ற 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடுகிறோம்.
நமது அரசியல் அமைப்பை உருவாக்கி நமது பயணம் ஜனநாயகம் கண்ணியம் மற்றும் ஒற்றுமையில் வேரூன்றி இருப்பதை உறுதி செய்த அனைத்து சிறந்த பெண்மணிகளுக்கும் ஆண்களுக்கும் தலை வணங்குகிறோம்.
இதையும் படிங்க: கிராமசபை கூட்டங்களால் என்ன பலன்?...
நமது அரசியலமைப்பின் லட்சியங்களை பாதுகாப்பதற்கும், வலுவான மற்றும் வளமான இந்தியாவை நோக்கி செயல்படுவதற்கும் இந்த சந்தர்ப்பம் மேலும் வலு சேர்க்கட்டும்"என்றும் அந்த வாழ்த்து செய்தியை பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: வீடியோ கேம் பெயரில் ரூ.70 கோடி மோசடி! சைபர் குற்ற கும்பல் 30 பேர் சிக்கினர்..! உ. பி. யில் தமிழ் I.P.S