×
 

திடீரென கேட்ட பயங்கர சத்தம்... குலுங்கிய வீடுகள்... பீதியில் திண்டுக்கல் மக்கள்...! 

சாணார்பட்டி பகுதிகளில் பகல் நேரங்களில் வெச்சத்தம் கேட்பதால் பொதுமக்கள் பீதி.

சாணார்பட்டி பகுதிகளில் பகல் நேரங்களில் வெச்சத்தம் கேட்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியப் பதிகளான கம்பிளியம்பட்டி, செங்குருச்சி, கோபால் பப்டி வேம்பார் பட்டி, செடிப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரத்திர்க்கும், மேற்ப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயம், மற்றும், பல்வேறு தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்னிலையில் இப்பகுதிகளில் பகல் நேரங்களில் சுமர், 12 மணி அளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாகவும் வெடிச்சத்தத்தால் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் கடை வைத்திருப்போர், மற்றும், வீடுகளில் குடி இருப்போர் தங்களின் வீடுகளை விட்டும், கடைகளை விட்டு வெளியில் வந்ததாகவும் தெரிவித்தனர்.  

இதையும் படிங்க: தொடரும் டோலி கட்டி சுமக்கும் அவலம்.. எப்போது தீரும் மலைவாழ் மக்களின் சோகம்? சாலை வசதி கேட்டு கோரிக்கை..!.

இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். வெடி சத்தம், தொடர்ந்து இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் கேட்பதாகவும், அது எதனால் கேட்கிறது என்பது பற்றி ஆய்வு செய்து அச்சத்தை போக்கும் படியும் மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

இதையும் படிங்க: சாலை வசதி இல்லாததால் அவலம்.. 8 கி.மீ டோலி கட்டி தூக்கி வந்த உறவினர்கள்.. பெண்ணை காப்பாற்ற முடியாததால் சோகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share