பற்றி எரியும் மும்மொழி கொள்கை விவகாரம்.. ஆங்கிலத்தில் முக்கியத்துவம்.. வலியுறுத்திய ராகுல்..!
முன்ஷிகஞ்சிலுள்ள சாலையோர உணவகத்தில் சமோசாக்களை ரசித்து சாப்பிட்டார் ராகுல் காந்தி.
மும்மொழிக் கொள்கையை நாடு முழுவதும் திணிப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
"இந்த கொள்கையின் அடிப்படையில் இந்தி மற்றும் சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கிறது" என்று தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தில் தனது சொந்த தொகுதியான ரேபரேலியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்க நிதி உதவி விவகாரம்... வெளிநாட்டு சக்திகளின் கருவி ராகுல்.. பாஜக பாய்ச்சல்..!
அப்போது தொகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடிய போது அவர் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டார்.
அப்போது அவர், " பட்டியலின, பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலை மக்கள் ஆங்கிலம் படித்து விடக்கூடாது" என பாஜக - ஆர் எஸ் எஸ் நினைக்கிறது. ஆங்கிலம் படித்தால் எந்த மாநிலத்திற்கும் அல்லது எந்த நாட்டிற்கும் வேண்டுமானாலும் சென்று பணி புரிய முடியும். ஆங்கிலம் மிகப்பெரிய ஆயுதம். நீங்கள் ஆங்கில மொழியை கற்றுக் கொண்டு விட்டால் எங்கும் செல்லலாம் .தமிழ்நாடு, ஜப்பான், மும்பை அல்லது உலகில் எந்த ஒரு நிறுவனத்திலும் நீங்கள் பணி செய்யலாம். ஆங்கில மொழிதான் அதிகாரத்தை கைப்பற்றவும் அடைவதற்குமான மிகப்பெரிய ஆயுதம். தாய் மொழியான இந்தியும் முக்கியம் தான். அதே நேரத்தில் ஆங்கில மொழியை கற்பதும் மிக மிக முக்கியம்" என்று கூறினார்.
மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றது.
இந்திரா, சோனியா, ராகுல், பிரியங்கா குடும்பத் தொகுதி
2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி ரெபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றிபெற்ற அவர் ரேபரெலியை தக்க வைத்துக் கொண்டு வயநாட்டை காலி செய்ய தேர்வு செய்தார். அங்கு அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவருக்கு முன்பு அவர்களுடைய தாயாரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி இது மக்களவைத் தொகுதி எம்.பி யாக பதவி வைத்திருக்கிறார். அவர்களின் பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி 1967, 1971 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து லேபரேலி தொகுதியில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்களும் உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர்.
ராகுல் காந்தி மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசும்போது "லேபரேலியாக இருந்தாலும் சரி நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி உங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும் உதவி செய்வதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள். நான் அதை செய்து முடிப்பேன்" என்றார்.
சாலையோர உணவகத்தில் சமோசாவை ரசித்து சாப்பிட்டார்
ராகுல் காந்தி வழக்கமான வெள்ளை டீ சர்ட் அணிந்திருந்தார். இந்த தொகுதியுடன் தனக்கு இருப்பது வெறும் அரசியல் உறவு அல்ல இது ஒரு குடும்ப உறவு என்றும் உற்சாகத்துடன் அவர் கூறினார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு ராகுல் காந்தி முன்ஷிகஞ்சிலுள்ள சாலையோர உணவகத்தில் சமோசாக்களை ரசித்து சாப்பிட்டபடி மக்களுடன் கலந்துரையாடினார். அவருடன் அமேதி எம்.பி கிஷோரி லால் சர்மா மற்றும் கட்சித் தலைவர்கள் இருந்தனர்.
ராகுல் மக்கள் மத்தியில் உரையாடுவது போன்ற வீடியோ உள்ளது. அதிலிருந்து படம் எடுக்க முடியவில்லை. வழியில் சாலையோர உணவகத்தில் சமோசாவே ராகுல் ரசித்து சாப்பிட்டதாகவும் செய்தியில் குறிப்பிட்டு இருக்கிறேன். அந்த படம் கிடைத்தாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: இதில் ஈகோ பார்க்கக் கூடாது… மோடி-அமித் ஷாவிடம் நேருக்கு நேர் எகிறிய ராகுல் காந்தி..!