தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டிய நேரம் இது... மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..!
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், தென்தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு-குறு நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தோர், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்ததோர், மாணவர்கள் ஆகியோர் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும், சறுக்கல்களை சந்தித்தாலும் தொழில்துறையில் சாதிக்க வேண்டும் என்ற உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன். தென்தமிழகம் மனித வளத்தாலும், இயற்கை வளங்களாலும் நிறைந்துள்ளது. ஆனாலும் தொழில்வளர்ச்சியில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஒரு தோற்றம் இருக்கிறது. தொழில் தொடங்குவதற்கு எல்லா சாத்தியக்கூறுகள் இருந்தாலும், இந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
இதையும் படிங்க: மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்- கோலத்தில் எதிர்ப்பு ஜாலம் காட்டிய இல்லத்தரசிகள்..!
இளைஞர்களிடம் முன்னெப்போதைக்காட்டிலும் போதைப்பொருள் நடமாட்டமும், பழக்கமும் அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. அரசியல்ரீதியாக திட்டமிட்டு திசைதிருப்பப்படும் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாறாக தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் இருமொழிக் கொள்கையால் தென்தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள்.
இந்தியை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு தென்மாநில மொழிகளைக் கூட அறிந்து கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைக்கு தமிழக அரசு இவர்களை தள்ளி உள்ளது. எந்த மொழியை படிக்க வேண்டும் என்ற தேர்வு இளைஞர்கள் வசம் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்...
இதையும் படிங்க: மசோதாக்களை நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் சுளீர்.!