2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... போலிஸுக்கே தண்ணி காட்டிய மத போதகர் சிக்கியது எப்படி..?
ஜான் ஜெபராஜ் மீது கோவை மத்திய அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் வழக்கில் ஜான் ஜெபராஜ் மீது கோவை மத்திய அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் மூணாறில் ஜான் ஜெபராஜை கோவை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு ஸ்கெட்ச்... கட்டம் கட்டி அதிரடி ஆக்சனில் இறங்கிய போலீஸ்!!
யூடியூபில் படு ஸ்டைலஸ் போதகராக திகழ்ந்து வந்தவர் ஜான் ஜெபராஜ். ஆராதனை என்ற பெயரில் குத்தாட்டம் போடுவது, சினிமா பாடல்களை பாடுவது என்று மற்ற கிறிஸ்துவ போதகர்களிடன் இருந்து கொஞ்சம் வித்யாசப்பட்டவர் ஜான் ஜெபராஜ். நடிகர்களுக்கு இணையாக போட்டோ ஷூட் நடத்தி பிரபலமானவர்.
இந்நிலையில், கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள சபையை சேர்ந்த போதகர் ஜான் ஜெபராஜ் மீது பாலியல் புகாரின் பேரில் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மே 21, 2024 அன்று கோவை நகரத்தில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் போதகர் ஜான் ஜெபராஜ் ஒரு விருந்தை ஏற்பாடு செய்தார். அவரது மாமனார் தத்தெடுக்கப்பட்ட மைனர் பெண்ணையும், பெண்ணின் 14 வயது அண்டை வீட்டாரையும் போதகரின் வீட்டிற்கு அழைத்து வந்தார். விருந்தின் போது, போதகர் ஜான் ஜெபராஜ் இரண்டு மைனர் சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டார்.
இருப்பினும், கடந்த 11 மாதங்களாக இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வரவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவரின் குடும்பத்தினர் மூலம் சில நாட்களுக்கு முன்பு காவல்துறைக்கு பாலியல் வன்கொடுமை குறித்து தெரிய வந்தது. பாதிக்கப்பட்டவரிடம் இருந்து புகார் பெறப்பட்டது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 9 (l) (மோசமான பாலியல் வன்கொடுமை) மற்றும் 10 (மோசமான பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ், பாதிரியார் ஜான் ஜெபராஜ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையில், பாதிரியார் தலைமறைவாகிவிட்டார். பாதிரியாரைப் பிடிக்க ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டது. இரண்டு மைனர் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையை போலீசார் உறுதிப்படுத்தினர். விருந்தின் போது பாதிரியார் தனது வீட்டில் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டார். இதனையடுத்து தலைமறைவாகி ஜான் ஜெபராஜ் போலீசாருக்கு தண்ணி காட்டி வந்தார். இந்நிலையில் தனக்கு முன் ஜாமீன் வேண்டி நீதிமன்றத்தை தனது வழக்கறிஞர்கள் மூலம் நாடினார் ஜான் ஜெபராஜ்.
இந்நிலையில் கேரள மாநிலம், மூணாறில் பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை கோவை போலீசார் கைது செய்தனர்.