குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட எம்பி எம்எல்ஏக்கள் போன்ற அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை மிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
எல்ஏக்களுக்கு எதிரான ஏறத்தாழ 5000 வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகின்றன. அவற்றில் தமிழ்நாட்டில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 220. இந்த வழக்குகளின் விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான பொதுநல வழக்கில் நீதிமன்றத்தின் சார்பில் நடுவராக (அமிக்கஸ் கியூரி) நியமிக்கப்பட்ட மூத்த வக்கீல் விஜய் ஹன்சார்யா பிரமாண பத்திரம் ஒன்றை சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அதில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையில் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்துவதாகவும் விசாரணை விரைவாக நடத்தி முடிக்க முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் நியமிப்பதில் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம்.. பிப்.12ம் தேதி விசாரணை!
மேலும் இந்தப் பிரமாண பத்திரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக மொத்தம் 4732 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 2024 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 892 வழக்குகளும் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (தமிழ்நாட்டில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 220 ஆகும். )
தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ஏ டி ஆர்) அறிக்கையை மேற்கோள் காட்டி தற்போதைய மக்களவையில் உள்ள 543 உறுப்பினர்களின் 251 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்றும் அவற்றில் 170 பேர் கடுமையான குற்றவாளிகள் (ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனைக்கு உட்பட்டவை) என்றும் இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த வக்கீல் ஹன்சாரி கூறியிருக்கிறார்.
வழக்குகளின் விசாரணை தாமதத்திற்கு பல்வேறு காரணங்களை குறிப்பிட்ட அவர் இந்த வழக்குகள் நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றங்கள் வழக்கமான நீதிமன்ற பணிகளை மேற்கொள்கிறது. அத்துடன் இந்த வழக்குகளையும் சேர்த்து அந்த நீதிமன்றங்களும் விசாரித்து வருகின்றன.
சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் நீதிமன்றங்களில் ஆஜராவதில்லை. சாட்சிகள் மீது சாட்சியங்கள் பதிவு செய்வதற்கான செயல்முறை சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
குறிப்பிட்ட தேதிகளில் நீதிமன்றத்தில் சாட்சிகள் இருப்பதற்கான பயனுள்ள மற்றும் தீவிரமான நடவடிக்கைகளை அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை என்றும் அரிதான மற்றும் கட்டாய காரணங்களை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் விசாரணை நீதிமன்றம் வழக்குகளை ஒத்தி வைக்காது என்று இந்த நீதிமன்றத்தின் உத்தரவு இருந்த போதிலும் விசாரணை நீதிமன்றங்கள் ஒத்திவைப்புகள் வழங்குவதில் தாராளமாக உள்ளன என்றும் அதில் அவர் கூறியிருக்கிறார்.
சுயமாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் பல்வேறு உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகள் வழக்குகளின் விசாரணையில் கணிசமான முன்னேற்றம் இல்லை என்பதை காட்டுகின்றன. எனவே இந்த வழக்குகளை விரைவாக தீர்ப்பதை உறுதி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் மேலும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டியது அவசியம் என்றும் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது .
அரசியலமைப்பின் பிரிவு 19 (1 ) (ஏ)-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதியாக தகவல் அறியும் உரிமை இருப்பது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையில் முன்னேற்றத்தை அறிய குடிமக்களின் உரிமையை உள்ளடக்கியது என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் அனைத்து தகவல்களையும் வழங்கும் ஒரு முக்கிய தகவல் இருந்தால் மட்டுமே இது போன்ற தகவல்களை சேகரிக்க முடியும் சட்டமன்ற உறுப்பினர்களின் குற்றவியல் பின்னணியை பற்றி வாக்காளர்கள் அறிய உரிமை உண்டு. அதில் விசாரணையின் முன்னேற்றம் மற்றும் தாமதத்திற்கான காரணங்களும் அடங்கும் என்றும் வக்கீல் ஹன்சாரி பிரமாண பத்திரத்தில் கூறியிருக்கிறார்.
இனி இனி இந்த நீதிமன்றங்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்களுக்கு எதிரான விசாரணை மட்டுமே நடக்கும் என்றும் இந்த வழக்குகளின் விசாரணை முடிந்த பிறகு தான் மற்ற வழக்குகள் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
புதிய சட்ட பிரிவுகளின் படி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நிலுவையில் இருக்கும் அனைத்து வழக்குகளையும் தினசரி அடிப்படையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ச்சியாக இரண்டு விசாரணைகளுக்கு ஆஜராகாத அனைத்து வழக்குகளிலும் அவரை கைது செய்து ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட்களை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்படுமா?:
இதற்கிடையில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கும்படி வலியுறுத்தி கடந்த 2016 ஆம் ஆண்டு அஸ்வினி உபாத்தியாய் தாக்கல் செய்த பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் தீபங்கள் தத்தா மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனு மீது இன்று விசாரணை நடத்துகிறார்கள்.
இதையும் படிங்க: கும்பமேளா நெரிசலில் 30 பேர் பலி: பொதுநல வழக்கு தள்ளுபடி; "உயர் நீதிமன்றத்தை நாடும்படி" உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்