ரூ. 13 லட்சம் 'ஜானிவாக்கர் விஸ்கி' ஊழல்: கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படுவாரா?
3 நாட்கள் முன்னதாக நோட்டீஸ் வழங்கும்படி, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..
ஜானி வாக்கர் விஸ்கி மீதான விற்பனை தடையை நீக்க, கார்த்தி சிதம்பரம் எம்பி, வெளிநாட்டு நிறுவனத்தில் 15,000 அமெரிக்க டாலர் (ஏறத்தாழ 13 லட்சம்) லஞ்சம் வாங்கியதாக சிபிஐ புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மூன்று நாட்களுக்கு முன்பாக அவருக்கு எழுத்து மூலம் நோட்டீஸ் வழங்கும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிரபல மதுபான நிறுவனமான 'டியாகோ ஸ்காட்லாண்ட்' தனது தயாரிப்புகளை இந்தியாவில் வரி இன்றி விற்பனை செய்ய இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் கடந்த 2005-ம் ஆண்டு தடை விதித்தது.
இதையும் படிங்க: புதிய சி.பி.ஐ ஊழல் வழக்கில் சிக்கிய கார்த்தி சிதம்பரம்
இதனால் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஜானி வாக்கர் விஸ்கி விற்பனை வெகுவாக பாதித்தது. டியாகோ ஸ்காட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் 70 சதவீதம் அளவுக்கு பாதிப்படைந்தது.
இதனால் ஜானி வாக்கர் விஸ்கி மீதான விற்பனை தடையை நீக்க முன்னள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியை டியாகோ ஸ்காட்லேண்ட் நிறுவனம் நாடியது.
ஆலோசனை கட்டணம் என்ற பெயரில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது உதவியாளர் பாஸ்கர் ராமன் கட்டுப்பாட்டில் இருந்த ‘அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கல்சல்டிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துக்கு 15,000 அமெரிக்க டாலரை (ரூ. 13 லட்சம்) டியாகோ ஸ்காட்லேண்ட் மற்றும் செக்கோயா கேபிடல்ஸ் என்ற நிறுவனங்கள் செலுத்தியுள்ளன.
இதையடுத்து டியாகோ ஸ்காட்லேண்ட் நிறுவனம் விற்பனை தடையில் இருந்து விடுபட கார்த்தி சிதம்பரம் உதவியுள்ளார் என சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
கைது ஆவாரா?
இந்த வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் வழங்கும் படி உத்தரவு இது குறித்து நீதிபதி காவேரி பவேஜா கூறுகையில் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என்றால் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அவருக்கு எழுத்துப்பூர்வ நோட்டீசை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் கார்த்தி சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு மீது இந்த உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் இந்தியா திரும்பியதும் விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்றும், சட்டத்தின்படி தேவைப்படும் நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
வழக்கு விசாரணையின் போது 'சிபிஐ தரப்பில் பி என் எஸ் எஸ் சட்டத்தின் 35 (3) பிரிவினில் சிதம்பரத்திற்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை எனவே அவர் கைது செய்யப்படுவார் என்ற அச்சம் தேவையில்லை" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே பல ஊழல் வழக்குகளை சந்தித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அவரை சிபிஐ கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்தது. அதன் பின் அவர் ஜாமீன் பெற்றார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் மீது புதிய ஊழல் வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: வசமாக சிக்கிய ராஜேந்திர பாலாஜி... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்றம்!