×
 

ஏன் இந்த ஆர்வக்கோளாறு..? திமுக தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: வெடிக்கும் ஆர்.எஸ்.எஸ்..!

திமுக போன்ற கட்சிகள் இதில் தேவையில்லாமல் விவகாரத்தை கிளப்பாமல் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், 7 மாநில முதல்வர்கள், அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அடுத்த கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் தனது கருத்தை வெளியிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத் தலைநகரான பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூன்று நாள் கூட்டம் நடைபெறுகிறது. இரண்டாவது நாளான இன்று ஆர்.எஸ்.எஸ் இணைப் பொதுச் செயலாளர் அருண் குமார்  செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது பேசிய அவர், வங்காளதேசம், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை போன்ற பிரச்சினைகள் குறித்து பேசினார். ''2002 க்குப் பிறகு, எல்லை நிர்ணயம் முடக்கப்பட்டது. எனவே, இதுவரை ஏதேனும் அதுகுறித்து புதிய சட்டம் ஏதும் வெளிவந்துள்ளதா?

இது தொடர்பாக தேவையற்ற அச்சங்களை சிலர் வெளிப்பத்தி வருகிறார்கள். சமூகத்தில் உள்ள அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வது பற்றிப் பேசப்பட வேண்டும். அவநம்பிக்கையை உருவாக்குவதை திமுக போன்ற கட்சிகள் தவிர்க்க வேண்டும். தொகுதி மறுவரையறை குறித்து இல்லாத ஒரு சட்டம் வருவதாக அவர்கள் கூறி வருகிறார்கள். முதலில் தொகுதி மறுவரையறைச் சட்டம் 1979-ல் இயற்றப்பட்டது. அதன் பிறகு தொகுதி மறுவரையறைச் சட்டம் 2002-ல் வந்தது. அதன் பிறகு தொகுதி மறுவரையறை முடக்கப்பட்டது. எனவே கேள்வி என்னவென்றால், இதுவரை ஏதேனும் புதிய சட்டம் வெளிவந்துள்ளதா..?

இதையும் படிங்க: ‘மொழி பிரச்சனை, டீலிமிட்டேஷன் நாட்டை வடக்கு-தெற்கு என பிளவுபடுத்தும்’.. மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை..!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்படும். அதன் பிறகே தொகுதி மறுவரையறை செய்யப்படும். இந்தப் பிரச்சினையை இப்போது எழுப்புபவர்களிடம் கேளுங்கள். மக்கள் தொகைணக்கெடுப்பு முடிந்த பிறகே தொகுதி மறுவரையறை சட்டம் வரும். அதுபோன்ற எதுவும் இப்போத் நடக்கவில்லை. பிறகு ஏன் திமுக போன்ற கட்சியினர் இந்தப் பிரச்சினையை முன்னெடுத்துச் செல்கிறார்கள்? தொகுதி மறுவரையறையை ஒரு பிரச்சினையாக ஆக்குபவர்கள், தாங்கள் செய்வது சரியா? என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும். திமுக போன்ற கட்சிகள் இதில் தேவையில்லாமல் விவகாரத்தை கிளப்பாமல் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

பாஜக தலைவர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அருண் குமார் கூறுகையில், ''ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 32 அமைப்புகள் உள்ளன. ஒவ்வொரு அமைப்பும் தன்னளவில் சுதந்திரமானது, தன்னாட்சி பெற்றது, அதன் சொந்த தேர்தல் செயல்முறையைக் கொண்டுள்ளது. எந்தவொரு அமைப்பிலும் பாஜக தலைவர் தேர்தலுக்கு எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. அவர்களுடன் எங்களுக்கு எந்த மோதலும் இல்லை. அங்கு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில நாட்கள் பொறுமையாக இருங்கள், பலன் தெரியும்'' எனத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் வங்கதேசம் தொடர்பான ஒரு திட்டமும் நிறைவேற்றப்பட்டது. ''வங்கதேச இந்து சமுதாயத்துடன் ஒற்றுமையாக நிற்க அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ஆர்எஸ்எஸ் அகில இந்திய பிரதிநிதிகள் சபை நிறைவேற்றும். வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்களை அரசியலுடன் தொடர்புபடுத்தக் கூடாது என்று தீர்மானம் கூறியது. பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு கோரப்பட்டுள்ளது'' என அவர் கூறினார்.

''தொகுதி மறுவரையறைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் அது நியாயமாக இருக்க வேண்டும்'' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஒரு கூட்டத்தை இன்று நடத்தினார். தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகளை வரையறுக்கக் கூடாது என்று ஸ்டாலின் கூறினார். நாங்கள் எல்லை நிர்ணயத்திற்கு எதிரானவர்கள் அல்ல, நியாயமான எல்லை நிர்ணயத்தை ஆதரிப்போம். உரிமைகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு, தொடர்ச்சியான நடவடிக்கை மிக முக்கியமானது'' என அவர் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: அவுரங்கசீப் சமாதி விவகாரம்.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்த கருத்து.. இந்துத்துவ அமைப்புகளுக்கு பின்னடைவு.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share