×
 

திருநெல்வேலிக்கே பெருமை! பேராசிரியை விமலாவுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!

தமிழ் மொழியில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது நெல்லையைச் சேர்ந்த பேராசிரியை விமலாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள எழுத்தாளரின் ஆவண நூலை தமிழில் திறம்பட மொழி பெயர்த்ததற்காக பேராசிரியை விமலாவுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலா எழுதிய ' எண்ட ஆண்கள் ' என்ற ஆவண நூலை தான் பேராசிரியை விமலா தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

எழுத்தாளர் நளினி ஜமீலாவின் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்தும் முக்கியமான வரலாற்று நூலாகிய இது இந்திய சமூகத்தில் பாலின சமத்துவம், பெண்களின் உரிமை, அவரது போராட்டங்களுக்கு என பல முக்கிய அம்சங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.. 

இதையும் படிங்க: போலீசை கண்டித்து மறியல்... சப்பர ஊர்வலத்தில் சலசலப்பு..!

இந்த நூலை தனித்துவமான தமிழாக்கம் மூலமாகவும், விரிவாக இலக்கிய நயத்துடனும் மொழிபெயர்த்துள்ளார் பேராசிரியை விமலா. அந்த நூலின் உண்மையான உணர்வுகளை தமிழில் படிக்கும் வாசகர்கள் நேர்த்தியாக புரிந்து கொள்ளும் வகையில் மொழிபெயர்த்ததற்காக பேராசிரியை விமலாவிற்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது 

திருநெல்வேலியில் உள்ள தூய சவேரியார் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் விமலா.

நளினி ஜமீலாவின் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்தும் முக்கியமான வரலாற்று நூலாகும். இந்திய சமூகத்தில் பாலின சமத்துவம், பெண்களின் உரிமை, அவரது போராட்டங்கள் போன்ற பல முக்கியமான அம்சங்களை இந்த நூல் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.

 

 

இதையும் படிங்க: “இன்னம் ஐந்தே வருஷத்துல...” நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share