×
 

உரிமைப் பங்கு வெளியீட்டு கால அளவை குறைத்தது SEBI.. ஏப்ரல் 7 முதல் அமல்..!

உரிமைப் பங்கு வெளியீட்டு கால அளவை 126 நாட்களிலிருந்து 23 வேலை நாட்களாக குறைத்துள்ளது செபி.

நிறுவனங்கள் மூலதனத்தை விரைவாக திரட்ட உதவும் வகையில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) உரிமைப் பங்கு வெளியீட்டு கால அளவை 126 நாட்களிலிருந்து 23 வேலை நாட்களாக குறைத்துள்ளது. இது வரும் ஏப்ரல் 7, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.

செபியின் சுற்றறிக்கையின்படி, 2018-ம் ஆண்டு செபி (மூலதன வெளியீடு மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) ஒழுங்குமுறைகளின் திருத்தப்பட்ட 85-வது பிரிவின் கீழ், நிறுவனத்தின் இயக்குநர் குழு உரிமைப் பங்கு வெளியீட்டை அங்கீகரித்த தேதியிலிருந்து 23 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிரிவு 87-ன் படி, பங்கு சந்தா காலம் குறைந்தபட்சம் 7 நாட்கள் மற்றும் அதிகபட்சம் 30 நாட்களாக இருக்கும். பங்கு விண்ணப்ப சரிபார்ப்பு மற்றும் ஒதுக்கீடு இறுதி செய்யும் பணிகளை பங்குச் சந்தைகள், டெபாசிட்டர்கள் மற்றும் பதிவாளர்கள் மேற்கொள்ளும்.

இதையும் படிங்க: சிக்கலில் செபி EX. தலைவர்...வழக்கு தொடர உத்தரவு

ஏப்ரல் 7, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகள், அன்று முதல் இயக்குநர் குழு அங்கீகரிக்கும் உரிமைப் பங்கு வெளியீடுகளுக்கு பொருந்தும். இது நிறுவனங்களுக்கு விரைவான பணப்புழக்கத்தை உறுதி செய்யும் என்று சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், செபியின் புதிய தலைவர் துஹின் காந்த பாண்டே தலைமையில் நடைபெறவுள்ள முதல் குழு கூட்டத்தில், முக்கிய ஒழுங்குமுறை திட்டங்கள் விவாதிக்கப்பட உள்ளன. 

டிமேட் கணக்குகளுக்கு UPI போன்ற பாதுகாப்பு அமைப்பு, தீர்வு நிறுவனங்களின் சுதந்திரம், தகுதியான நிறுவன முதலீட்டாளர்களின் (QIBs) வரம்பு விரிவாக்கம், ஆராய்ச்சி ஆய்வாளர்களின் கட்டண மாற்றங்கள் ஆகியவை அஜெண்டாவில் உள்ளன. 

டிமேட் கணக்குகளுக்கு UPI-யை ஒத்த பாதுகாப்பு அமைப்பு, மின்னணு பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது.

இந்த சீர்த்திருத்தங்கள், சந்தை வளர்ச்சியையும் முதலீட்டாளர் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்த செபியின் உறுதிப்பாட்டை காட்டுகின்றன. ஏப்ரல் 7 நெருங்கும்போது, நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் வேகமான, நெகிழ்வான உரிமைப் பங்கு சூழலுக்கு தயாராகி வருகின்றனர். இது இந்திய பங்கு சந்தையின் மூலதன திரட்டல் இயக்கவியலை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: செபி அமைப்பின் புதிய தலைவராக நிதி செயலர் துஹின் கந்தா பாண்டே நியமனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share