பொன்முடி நாக்கில் சனி வந்து உட்கார்ந்து விட்டது… உதயநிதிக்கும் மூத்த பத்திரிக்கையாளர் எச்சரிக்கை..!
50 பேர் கொண்ட கூட்டத்தில் கைதட்டலும் விசிலுக்கும் ஆசைப்பட்ட பொன்முடி வாயில் இப்போது சனி வந்து உட்கார்ந்து கொண்டது.
''பொன்முடியின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது. அமைச்சர் பதவி வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? அவரது பேச்சு பெண்களை மட்டும் அல்லாமல், சைவம், வைணவத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.ஆபாச பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,'' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள சீனியர் பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபாலன், ''வங்கி என்பது அதிமுகவில், திமுகவிற்கும் குறைந்துவிட்டது. அதை நாம் தமிழர் கட்சி, பாரதிய ஜனதா கட்சி போன்ற கட்சிகள் எடுத்துக் கொண்டு விட்டாலும் வாக்கு வங்கி ரீதியாக பார்க்கப் போனால் கண்டிப்பாக இரண்டு திராவிட கட்சிகளுக்கும் இறங்கு முகம்தான்.
இதையும் படிங்க: பொன்முடிதான் கடைசி… எந்தப்பயலும் இந்துக்களுக்கு எதிராகப் பேசக்துணியக் கூடாது: ஹெச்.ராஜா எச்சரிக்கை..!
ஆனால் கூட்டணி வைத்துக்கொண்டு சமாளிக்கக்கூடிய திறமையை திமுகவுக்கு இருப்பதனால் ஸ்டாலின் சமாளித்து வந்தார். அதே திறமை எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டணி வைத்ததால் இப்போது முதல் ஆரம்பித்து விட்டது. ஆகையால், கடுமையான போட்டியாக இருக்கும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது வெறுப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 5 வருடங்களில் அவருடைய ஆட்சி மீது வெறுப்பு பொதுமக்களுக்கு வந்து விட்டது.
போதைப்பொருள், கள்ளச்சாராயம், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனது சில கருத்துக்கள், அமைச்சர்கள் மூலமாக பரப்புவது, பொன்முடி போன்றவர்கள் பேசுவது… இப்படி திமுகவிற்கு இறங்கு முகம். அதிமுகவிற்கு ஏறுமுகம் என்றுதான் என்னுடைய கருத்து.
மு.க.ஸ்டாலின், பொன்முடி ஒரு சீனியர் அமைச்சராக இருந்தாலும்கூட கொச்சையாக பேசுகிறார் என்றவுடன் உடனே நடவடிக்கை எடுக்கிறார்களே.. இந்த க்ளீனிங்க் வேலையை ஏன் செய்ய வேண்டும்? நிச்சயமாக கட்சியை வளர்த்தெடுக்கும் முகமாகத்தானே இதனை செய்ய முடியும்? என்ற கேள்விக்கு, பதிலளித்த அவர், பொன்முடி மேல் நடவடிக்கை எடுக்கும் அவர்கள், ஏன் உதயநிதி ஸ்டாலின் மீது எடுக்கவில்லை? ஒரு 50 பேர் 60 பேர் இருக்கக்கூடிய திடலில் பெரியார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருந்த கூட்டத்தில், சைவமும் வைணவம் என்று கிண்டல் பேசினால் அதற்கு கைத்தட்டில் வரும் என்பதற்காக 50 பேர் கொண்ட கூட்டத்தில் கைதட்டலும் விசிலுக்கும் ஆசைப்பட்ட பொன்முடி வாயில் இப்போது சனி வந்து உட்கார்ந்து கொண்டது.
அதனால்தான் எல்லாம் போச்சு. ஒன்னும் இல்லை, உச்ச நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு ஒரு மனு தாக்கல் செய்தார். ராமர் என்பவர் மித் என்று மனு தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த வருடம் அவருக்கு பதவியே போய்விட்டது. எதுவாக இருந்தாலும் நாகாக்கப்பட வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கெஜ்ரிவால் போல ஸ்டாலினும் ஜாமினில் வந்து பிரசாரம் செய்வார்.. கே.பி.ராமலிங்கம் கணிப்பு!