×
 

உதாசீனப்படுத்திய ராகுல் காந்தி.. காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுக்கப்போகும் சசிதரூர்..!

ராகுல் காந்தியுடனான பேச்சு விவரங்களைக் கூற அவர் மறுத்துவிட்டார். ''தனிப்பட்ட ரகசிய பேச்சுக்களை பற்றிய  தகவல்களை வெளியிட முடியாது'' என்று கூறினார்.

மக்களவை எம்.பி., சசி தரூர் காங்கிரஸ் கட்சிக்குள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறார். பிரதமர் நரேந்திர மோடியையும், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசையும் அவர் புகழ்ந்ததிலிருந்து, கட்சியில் அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார். அவர் பாஜக அல்லது சிபிஎம்மில் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் இந்த யூகங்களை மறுத்துள்ளார்.

ஆனாலும், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறப்படுவது போல சசிதரூர் விஷயத்திலும் அதனைப் பொறுத்திப் பார்க்கலாம். ராகுல் காந்தி, சசிதரூரை டெல்லிக்கு வரவழைத்து பேசியுள்ளார். ஆனல், சசிதரூரின் மனக் குறைகளை நிவர்த்தி செய்வதாக எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. கட்சியில் தனது பங்கை தெளிவுபடுத்த தரூர் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் ராகுல் காந்தி  அவற்றையெல்லாம் உதாசீனப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

சசி தரூர் ஒரு மலையாள பத்திரிகையின் பாட்காஸ்டில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். ''காங்கிரசுடன் இணைந்து செல்ல நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அந்த கட்சிக்கு நான் தேவையில்லை என்றால் எனக்கும் வேறு வழிகள் உள்ளன. எனக்கும் விருப்பங்கள் உள்ளன. ஒருவேளை இனியும் காத்திருக்க முடியாது. என்றும் காங்கிரஸ் உயர் கட்டளைக்கு அவர் செய்தி அனுப்பியுள்ளார். வேறுபாடுகள் இருந்தபோதிலும் நான் கட்சி மாற நினைக்கவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் என்னை மதிக்காவிட்டால் எனக்கு வேற சாய்ஸ் இருக்கு..! மிரட்டும் சசி தரூர்..!

இருப்பினும், நான்கு முறை காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த சசிதரூர், தனக்கு அடுத்துஎன்னென்ன விருப்பங்கள் உள்ளன என்பதை வெளியிடவில்லை. பாஜகவில் இணைவதில் விருப்பங்கள் உள்ளதா?  கேரளாவில் வலுவான ஆதரவு தளத்தைக் கொண்ட கம்யூனிஸ்டு கட்சியில் இணைவாரா?

கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் கொள்கைகளை சசி தரூர் சமீபத்தில் பாராட்டியிருந்தார். அத்தோடு, பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தையும், டொனால்ட் டிரம்புடனான சந்திப்பையும் அவர் பாராட்டினார். ஆனால் காங்கிரசுக்கு அவரது இந்த செயல்பாடுகள் பிடிக்கவில்லை. இந்த சர்ச்சை குறித்து சசி தரூர் தனது கருத்தை பாட்காஸ்ட் நேர்காணலில் விளக்கியுள்ளார்.

அவர், தன்னை ஒருபோதும் அரசியல்வாதியாகக் கருதியதில்லை என்றும், தனது அரசியல் பார்வைகள் 'குறுகியவை' என்றும் கூறினார். கேரளாவில் புதிய வாக்காளர்களை ஈர்க்க காங்கிரஸ் தனது தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

கேரள காங்கிரஸ் பிரிவில் செல்வாக்கு மிக்க தலைவர் யாரும் இல்லை என்றும் தரூர் கூறினார். மற்ற காங்கிரஸ் தலைவர்களும் தனது கருத்துக்களை ஆதரித்ததாக அவர் கூறினார். கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில், தரூரின் இந்தக் கருத்து மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தனது செல்வாக்கை விரிவுபடுத்தாவிட்டால், கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எதிர்க்கட்சியில் அமர வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

பிரதமர் மோடியையும், கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசையும் புகழ்ந்து பேசிய பிறகு காங்கிரஸுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சசிதரூரை, ராகுல் காந்தி டெல்லிக்கு அழைத்தார். இருவரும் பிப்ரவரி 18 அன்று சந்தித்தனர். அந்த சந்திப்பு தொடர்பான ஆதாரங்களை மேற்கோள் காட்டி, சசிதரூரின் மனக்குமுறல்களையும், பரிந்துரைகளையும் ராகுல் காந்தி தெளிவாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சசிதரூரிடம் மென்மையாக நடந்து கொள்ளும் மனநிலையில் இல்லை.ராகுல் காந்தியுடனான சந்திப்பின் போது, ​​கட்சியில் தனது பங்கு என்ன என்பதை தரூர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். கட்சிக்குள் புறக்கணிக்கப்பட்டதில் அவர் ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

டெல்லியில் ராகுல் காந்தியுடனான சந்திப்பு குறித்து சசி தரூரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு'' அது மிக நல்ல சந்திப்பு'' எனக் கூறினார். அரை மணி நேர உரையாடலில் ராகுல் காந்தியுடன் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்க முடிந்தது என்று அவர் கூறினார். பலமுறை கேட்டபோதும் ராகுல் காந்தியுடனான பேச்சு விவரங்களைக் கூற அவர் மறுத்துவிட்டார். ''தனிப்பட்ட ரகசிய பேச்சுக்களை பற்றிய  தகவல்களை வெளியிட முடியாது'' என்று கூறினார்.

தொழில்முனைவோரை ஊக்குவித்ததற்காக கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை பாராட்டி அவர் எழுதிய கட்டுரை ஒரு சர்ச்சையைத் தூண்டியது. இது கேரள காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது கட்டுரை குறித்து காங்கிரஸ் தலைவர்களின் தொடர்ச்சியான விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, ​​''சர்ச்சைக்குப் பின்னால் உள்ள காரணம் எனக்குப் புரியவில்லை'' என்று தரூர் கூறினார்.

இதையும் படிங்க: ராகுல்காந்தியின் கேடுகெட்ட செயல்..! கண்டிக்காமல் 'ஹிந்தி' ராகம் பாடும் திராவிட கூட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share