சீறிப்பாய்ந்த ஏவுகணை..! 100 சதவீதம் தயார் நிலையில் இந்தியா..!
அரபிக்கடலில் எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை ஏவுகணை மூலம் அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது.
பகல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தி படுகொலைகளை நிகழ்த்தியவர்களை உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கும் நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ளன.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர்வெடிக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி எதிரி நாடுகளை அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பகல்காம் தாக்குதல்..! பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு விதித்த கெடு நிறைவு..!
இந்திய கடற்படை போர்க்கப்பலில் இருந்து நீண்ட தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டது. அரபிக் கடலின் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பலில் இருந்து சீறிப்பாய்ந்த ஏவுகணை திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கியுள்ளது. இந்திய கடற்படை வீரர்களும், தொழில்நுட்ப குழுவினரும் 100% தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல்: உயிரிழந்த கடற்படை அதிகாரி.. ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்த ஹரியானா அரசு..!