×
 

காதலர் தினத்தில் அதிர்ச்சி சம்பவம்...வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்....காதலி மீது ஆசிட் வீசிய காதலன் 

காதலை கைவிட்டு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த இளம்பெண்ணை நடுரோட்டில் கத்தியால் குத்தி, ஆசிட் வீசிய இளைஞர் மாயமானார், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். கல்லூரி படிப்பை முடித்துள்ள இவரும் அதே கல்லூரியில் தன்னுடன் படித்து வந்த கணேஷ் (24) என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கல்லூரி படிப்பு முடிந்த பின்னர் இருவரும் அவரவர் ஊர்களுக்கு சென்றுவிட்டனர். சில மாதங்கள் வரை இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்த நிலையில் அதன்பின்னர் இளம்பெண் காதலன் கணேஷ் போனை எடுக்காமல் தவிர்த்து வந்தாராம். காதலி போன் எடுக்காததால் காதலன் காரணம் தெரியாமல் தவித்து வந்துள்ளார். 

இதனிடையே கடந்த மாதம் இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் ஏற்பாட்டின்பேரில் வேறு ஒரு இளைஞருடன் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தன்னை காதலி தவிர்ப்பதன் காரணத்தை அறிந்த கணேஷ், தனது காதலியின் ஊருக்குச் சென்றுள்ளார். காதலியை சந்தித்த அவர் தன்னை ஏன் ஒதுக்கினாய் என்று காரணத்தை கேட்டு, நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார். ஆனால் இதனை இளம்பெண் ஏற்க மறுத்ததோடு, இனி காதலை கைவிட்டு பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழுங்கள் எனக்கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். 

தன்னை காதலித்துவிட்டு, திடீரென கைவிட்டு வேறு ஒருவருடன் திருமணம் செய்துக்கொள்ளும் முயற்சியில் இருக்கும் இதனால் கடும் ஆத்திரம் அடைந்த கணேஷ், காதலித்து ஏமாற்றிய இளம்பெண்ணை பழிவாங்க திட்டமிட்டார். அதன்படி காதலர் தினமான இன்று இளம்பெண்ணின் வீட்டருகே ஆசிட் மற்றும் கத்தியுடன் காத்திருந்தார். இதனை அறியாத இளம்பெண், அங்குள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது கணேஷ், இளம்பெண்ணை மடக்கி கத்தியால் சரமாரி குத்தியுள்ளார்.

இதையும் படிங்க: காதலர் தினத்தில் அரங்கேறிய கொடூரம்... நடுரோட்டில் காதலி முகத்தில் ஆசிட் வீச்சு... சைக்கோ காதலனுக்கு வலைவீச்சு...! 

மேலும் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து பொதுமக்கள் கண்முன் காதலி மீது வீசினார். இதில் முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டு இளம்பெண் கதறி துடித்தார். அதற்குள் கணேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த குர்ரம்கொண்டா போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தப்பி ஓடிய காதலனை வழக்குப்பதிந்து போலீஸார் தேடிவருகின்றனர்.

விரும்புவதும் வெறுப்பதும் அவரவர் விருப்பம், ஏதோ ஒரு காரணத்தால் காதலி வேறு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பார், அதை ஏற்றுக்கொள்வதுதான் காதலனின் நடத்தையாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால் என்னை விரும்பித்தான் ஆகவேண்டும், என்னை விரும்பாத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என அழிக்க நினைப்பது குரூர மன நிலை ஆகும். 
 

இதையும் படிங்க: காதலர் தினத்தில் அரங்கேறிய கொடூரம்... நடுரோட்டில் காதலி முகத்தில் ஆசிட் வீச்சு... சைக்கோ காதலனுக்கு வலைவீச்சு...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share