தலித் விடுதலை பேசும் உங்களுக்கு வன்னியர்கள் மீது ஏன் இந்த வன்மம்..? கோபி நயினார் மீது மோகன் ஜி ஆவேசம்..!
வன்னியர் மக்களை பற்றி அவ்வளவு இழிவாக அந்த ஆடியோவில் பேசியிருப்பதும், ஒன்றாக இருக்கிற மக்களை அவர்களுக்கு எதிராக 'நீ என்ன செய்து விட்டாய்?' என்று தூண்டிவிடும் விதமாகவும் அந்த ஆடியோ இருந்தது.
சமூக வலைத்தளங்களில் இயக்குநர் கோபி நயினார் தலித் அரசியல் பற்றி பேசியதாக ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், வன்னியர் மக்களை இழிவாக பேசியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள இயக்குநர் மோகன் ஜி, அது தொடர்பாக இயக்குநர் கோபி நயினார் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள மோகன் ஜி,''இந்த வீடியோ திரைப்பட இயக்குனர் கோபி நயினார் அவர்களுக்கு... சமீப காலமாக, அதாவது நேற்று அல்லது முந்தாநாள் நீங்கள் பேசியதாக சமூக வலைதளத்தில் ஒரு ஆடியோ வைரலாக போய்க்கொண்டு இருக்கிறது. அது நீங்கள் தான் பேசி இருக்கிறீர்களா? அல்லது இப்போதுதான் பேசினீர்களா? அதெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆனால், அது நீங்கள் பேசியதா? உங்கள் குரலில் தான் அந்த ஆடியோ சுற்றிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: போலி திராவிடம்...! ரங்கராஜ் பாண்டேக்களுக்குடன் நட்பு… தலித்துகள் மீது வெறுப்பா..? குமுறும் கோபி நயினார் தரப்பு ..!
லெனின், காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் என தொடர்ந்து அவர்களை நான் படிக்கிறேன். அவர்கள் சார்ந்து பேசுகிறேன். தலித் அரசியல் பேசுகிறேன். தலித் மக்கள் விடுதலைக்காக பேசுகிறேன் என்று சொல்லிக் கொண்டு வரும் நீங்கள், வட தமிழ்நாட்டில் இணக்கமாக இருக்கிற இன்னொரு சாதி, அதாவது வன்னியர் மக்களை பற்றி அவ்வளவு இழிவாக அந்த ஆடியோவில் பேசியிருப்பதும், ஒன்றாக இருக்கிற மக்களை அவர்களுக்கு எதிராக 'நீ என்ன செய்து விட்டாய்?' என்று தூண்டிவிடும் விதமாகவும் அந்த ஆடியோ இருந்தது.
இதற்கு நீங்கள் ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் இயக்குனர் கோபி நாயனார் அவர்களே... அது நீங்கள் பேசிய ஆடியோ இல்லை என்றால், நான் பேசவில்லை என்றால் தெளிவாகச் சொல்லுங்கள். இல்லை நீங்கள்தான் பேசி இருக்கிறீர்கள் என்றால் அதற்கான மன்னிப்பை நீங்கள் கேட்டே ஆக வேண்டும். அதே சமூக வலைத்தளங்களில் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இது சாதாரண விஷயமாக கடந்து செல்ல முடியாது. தெளிவாக 'நீ அவங்களை போய் என்னடா பண்ணினாய்?' என்று தூண்டி விடும் விதமாகத்தான் அந்த ஆடியோ இருக்கிறது.
அதை நீங்கள் உங்கள் கட்சிக்காரனிடம் தான் பேசி இருக்கிறீர்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம். இது குறித்த விளக்கம் ஒன்றை வெளியிட வேண்டும். நீங்கள் பேசி இருந்தால் அதற்கு மன்னிப்பும் கேட்க வேண்டும் என இயக்குநர் திரு. கோபி நாயனார் அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'மேரா நாம் அப்துல் ரஹ்மான்...' என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை... இப்தாரில் இளகிய இ.பி.எஸ்