×
 

இத்தனை பேர் தவெகவில் இணைய காத்திருந்தார்களா? முட்டுக்கட்டை போட்ட இருவர்...

தவெகவில் இணைய பல கட்சிகளிலிருந்து பல தலைவர்கள் முயற்சி எடுத்தும் முக்கியமான இருவரின் தடையால் கட்சிக்குள் ஒருவரும் வர இயலவில்லை.கட்சி தலைமைக்கு இந்த தகவல் மறைக்கப்பட்டு யாரும் வரவில்லை என்றும் இதே நபர்கள் தவறான தகவல் பதிவு செய்துள்ளனர்.

தவெக தொடங்கி ஓராண்டு நிறைவு பெற உள்ளது. பிப்.2, 2024 அன்று தவெக தொடங்கப்பட்டது. தவெகவின் அணிகள் ஒவ்வொன்றாக அமைக்கப்பட்டு வேக வேகமாக பணிகள் நடந்து வந்த நிலையில் அக்டோபர் 27 அன்று தவெகவின் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. அந்த மாநாட்டில் விஜய் 45 நிமிடம் பேசினார். தன்னுடைய சித்தாந்த எதிரி யார்? அரசியல் எதிரி யார் என்பது பற்றியும் என்று மிகச் சிறப்பாக பேசினார். தன்னுடைய அரசியல் எப்படி இருக்கும் மற்றவர்களுடைய அரசியல் எப்படி, தான் எவ்வாறு வேகமாக செயல்படுவோம்.

ஆளுகின்ற அரசு எவ்வாறு எல்லாம் மக்களை வாட்டி வதைக்கிறது, கூட்டணி ஆட்சி எப்படி இருக்கும், தான் எப்படி கூட்டணி அமைப்போம் என்றெல்லாம் விஜய் ஆவேசமாக பேசினார். விஜய் பேசிய பிறகு தவெகவிற்குள் பெரிய மாற்றம் வரும் என்றெல்லாம் அனைவரும் எதிர்பார்த்தார்கள். அதேபோன்று மாற்று அரசியல் கட்சியில் இருந்த முக்கிய பிரமுகர்கள், அதிருப்தியில் இருந்தவர்கள் தங்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னால் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் பிரமுகர்கள் என பலரும் தவெகவில் சேர்வதற்காக கட்சியை அணுகினர்.

இதையும் படிங்க: 'விஜய்க்கு இருக்கிற அறிவுகூட இல்லை..? பெரியார் பெயரைச் சொல்லி வீரமணி ஏமாற்றுகிறார்...' தவெக-வுக்கு மாறும் விசிக ஆதரவாளர்கள்..!

சென்னை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரும், தற்போது அதிமுகவிலிருந்து பிரிந்து நிற்கின்றனர். ஓபிஎஸ் அணியை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களும், அமுமுகவில் உள்ள முக்கிய பிரமுகரும்,  திருச்சியை சேர்ந்த பிரபல பெண் பிரமுகரும்,  நாம் தமிழர் கட்சியில் உள்ள பிரபல பெண் பிரமுகர், அதிமுக, திமுகவில் உள்ள முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைவதற்கு அந்த இருவரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதேபோன்று ஏற்கனவே விஜய்யால் அழைக்கப்பட்ட அரசியல் ஆலோசகர்கள் மூன்று பேரும், வியூக வகுப்பாளர் ஒருவரும் தங்கள் அழைப்புக்காக காத்திருந்தனர்.

ஆனால் அந்த இருவர் யாரையும் கட்சிக்குள் உள்ளே விடாமல் எந்த முடிவும் எடுக்காமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் கட்சிக்குள் யாரும் வரவில்லை, விஜய் ரசிகர்கள் மட்டும் தான் கட்சி நடத்த வேண்டும் என்று நினைக்கும் நிலை இருந்து வந்தது. ஆனால் காலம் செல்ல, செல்ல பல விஷயங்கள் வெளிவர தொடங்கியுள்ளது. அதில் முக்கியமானது மேற்கண்ட பல பிரமுகர்கள் தவெகவில் சேர விண்ணப்பித்தும் அது நிராகரிக்கப்பட்டு, அதை  கட்சி தலைமைக்கும் தெரிவிக்கப்படாமல் அந்த இருவராலேயே ஒன்றும் இல்லாமல் செய்யப்பட்டது தற்போது அதிர்ச்சிகரமான தகவலாக வெளிவர தொடங்கியுள்ளது.

இதன் பலகீனம் என்னவென்றால் தவெகவில்  நிர்வாகிகளாக ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதும், அவர்களும் பொதுச் செயலாளரின் ஆதரவு பெற்ற நபர்களாக இருப்பதும் மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. தவெகவின் வியூக வகுப்பாளர் அவரது வியூக வகுக்கும் திட்டத்தை செயல்படுத்தி கட்சியை வேகப்படுத்தும் வேலையை செய்யாமல், கட்சிக்கு வரும் அரசியல் பிரபலங்கள், விஐபிக்களை பொதுச் செயலாளருடன் சேர்ந்துக்கொண்டு கட்சிக்காரர்போல் தடுத்து வந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

தவெகவை உற்றுநோக்கி வரும் உளவுத்துறையும், எதிர்க்கட்சிகளும் சமீபத்தில் நடந்த 19 பேர் நியமனங்களை பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொள்கிறார்கள். இது இப்படியே போனால் எந்த வகையிலும் அது தவெகவுக்கு உதவாது என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் விமர்சித்துவரும் நிலையில் இதை யார் மேலே கொண்டு செல்வது என்று மற்ற நிர்வாகிகள் தவித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த இருவர் செயல்பாட்டால் தவெக அடுத்த கட்ட நகர்வு பெருமளவில் பாதிக்கப்படும் நிலையில்,  தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் இருவரது செயல்பாடும் கட்சியில் பெரும் பின்னடைவாக அமையும் என்று இரண்டாம் கட்ட நிர்வாகிகள் தங்களுக்குள் பேசி வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

எம்ஜிஆர் போன்று ஆட்சி அமைப்பேன், எம்.ஜி.ஆர் வழி என் வழி என்று பேசிக் கொண்டிருக்கும் விஜய், எம்ஜிஆர் கட்சி தொடங்கிய பொழுது வெறுமனே ரசிகர்களை மட்டும் கட்சியை நிர்வாகிகளாக வைக்கவில்லை, ரசிகர்களை மட்டும் சந்திக்கவில்லை, அனைத்து தரப்பினரும் சந்தித்தார் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை பெற்றார். மற்ற கட்சிகளில் இருந்து பலரையும் கட்சிக்குள் தானே முன் நின்று அழைத்துக்கொண்டு வந்தார், 

எம்ஜிஆர் தன் கட்சியை நோக்கி வந்தவர்களை அரவணைத்து அவர்களுக்கு பதவி வழங்கி அழகு பார்த்தார். அனைத்து செல்வாக்கு மிக்கவர்களையும் அரசியல் அறிவு மிகுந்தவர்களையும் கட்சிக்குள் கொண்டு வந்தார். அவர்களுடைய அனுபவத்தை பயன்படுத்தி அதே நேரம் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு கட்சியை வழி நடத்தியதால், அடுத்த தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்து முதல்வராகவும் எம்ஜிஆரால் அமர முடித்தது.

அதன் பின்னர் தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு மேலாக தான் இறக்கும் வரையில் எம்ஜிஆர் திமுகவை ஆட்சியில் அமர விடவில்லை. எம்ஜிஆரை வழிகாட்டியாக பின்பற்ற நினைக்கும் விஜய்யும், இதே போன்றதொரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். இந்த நிலையில் இருவரின் செயல்பாட்டால் கட்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ள தகவல் தவெகவுக்குள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

இதையும் படிங்க: உதயநிதி துணை முதல்வராகும் போது... விஜய் முதல்வராக கூடாதா? - நடிகர் ரவிச்சந்திரன் ஆவேசம்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share