சவால்களை எதிர்கொண்ட சுனிதா, வில்மோருக்கு ராயல் சல்யூட்..! புகழ்ந்து தள்ளிய இபிஎஸ்..!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துகளை கூறியுள்ளார்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்துக்கு சென்றனர். இவர்கள் 8 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி பூமிக்கு திரும்பியது.
அமெரிக்காவை சேர்ந்த நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் வந்த விண்கலம் 17 மணி நேர பயணத்துக்குப் பிறகு இன்று அதிகாலை 3.27 மணியலவில் அமெரிக்காவின் ஃபுளோரிடா கடல் பகுதியில் வந்து சேர்ந்தது.
இதையும் படிங்க: என்ன சாதிச்சு கிழிச்சிட்டீங்க? நேரடியா விவாதிக்க திராணி இருக்கா? முதல்வருக்கு இபிஸ் சேலஞ்ச்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ்-ன் 'ட்ராகன்' விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பியுல்னர். இதையடுத்து பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில் ,திட்டமிடப்படாத 9 மாதங்கள் விண்வெளியில் இருந்து, நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்று புட்ச் வில்மோர் ஆகியோருக்கு தனது சல்யூட்.
குறிப்பாக விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக அங்கு வலுவாக நின்றார். அவரது பயணம் விண்வெளி ஆய்வு மட்டுமல்ல, பெண்களின் வலிமை மற்றும் அதிகாரமளித்தல் பற்றியது என்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரராக, அவரது முன்மாதிரியான பயணம் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
உங்கள் கதை வருங்கால தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு எதிராக ஓட்டுகளை ஒருங்கிணைக்கணும்.. இபிஎஸ் கருத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய சீமான்..!