இனி அண்ணாமலையை இப்படி கூப்பிடுங்க... திமுக மேடையில் பங்கமாய் கலாய்த்த எஸ்.வி.சேகர்...!
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய எஸ்.வி.சேகர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுவதை சரமாரியாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய எஸ்.வி.சேகர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுவதை சரமாரியாக விமர்சித்துள்ளார்.
ஒரு பூத்து கூட இல்லாத கட்சி எங்க கூட எல்லாரும் வந்து சேர்ந்து ஆசைப்படுறாங்கன்னு சொன்னா உலகத்துல எங்கயாவது அவ்வளவு வேடிக்கை நீங்க பார்க்க முடியுமா?. அந்த மாதிரி உலக மகா தயவு செய்து இனிமே என்னை நகைச்சுவை சக்கரவர்த்தின்னு கூப்பிடாதீங்க, அண்ணாமலை அவர்களை நகைச்சுவை சக்கரவர்த்தின்னு கூப்பிடுங்க. ஏன்னா வார்த்தைக்கு வார்த்தை சிரிப்பு வரமாதிரி பேசுறது நமக்கு முடியாது . ஏர்போர்ட்ல இனிமே நான் பேட்டி கொடுத்தா என்னை கேளுங்க அப்படின்னு அதை ஒரு பேட்டியா கொடுத்துட்டு போறாரு. வாயை திறந்தாலே இப்படித்தான்.
வாட்ச் பில் இன்னைக்கு வரைக்கும் கொடுக்கல. என் கையில் இருக்குற வாட்ச் பத்தி கேளுங்க. இது டைட்டன் வாட்ச் எந்த கடையில வாங்கினது, என்ன விலை எல்லாம் சொல்லுவேன். என்ன எல்லாம் சொல்லுவேன். நீங்க 10000 ரூபாய் சம்பாதிக்கிறீங்களா?, நாலு இட்லி சாப்பிடலாம். நீங்க 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்க ஆரம்பிச்சா 4000 இட்லியா சாப்பிட முடியும். அப்ப பயத்துல உடம்பு இன்னும் பார்த்துக்கணுன்னு தோணும், ரெண்டு இட்லி ஆயிடும்.
இதையும் படிங்க: உங்க சாயம் வெளுத்து போச்சு முதல்வரே..! அண்ணாமலை டைரக்ட் அட்டாக்..!
நேர்மையாக இருங்கள் குழந்தைகளை படிக்க வைங்க. கல்வியை கொடுங்க கல்வியை விட ஒழுக்கத்தை கொடுங்கள் அதுதான் முக்கியம். டாஸ்மார்க் திறந்துச்சு, டாஸ்மார்க் திறந்துச்சு போச்சு போச்சுன்னு கத்துறாங்க. அரசாங்கம் மருந்து கடையில விஷம் கூட தான் விக்குது, வாங்கி குடிக்கிறீங்களா அதை தான் போட்டுருக்கானே மது கொடியது உடல் நலத்துக்கு கேடுன்னு. அப்புறம் ஏன் வாங்கி குடிச்சிட்டு அரசாங்கத்தை குற்றம் சொல்வதில் எந்த பிரயோஜனமும் கிடையாது என்றார்.
இதையும் படிங்க: லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல திரும்புற கதையெல்லாம் வேண்டாம் அன்ணாமலை.. பங்கம் செய்த காங்கிரஸ் எம்.பி.!