ரயில் கடத்தலுக்கு பழி: கோபத்தில் பாகிஸ்தானின் மூக்கை உடைத்த தலிபான்கள்..!
பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் தனது பாதுகாப்பு, உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்
பலுசிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டதற்கு ஆப்கானிஸ்தானே காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. கடத்தலின் போது பலூச் விடுதலை படையினர் ஆப்கானிஸ்தானில் அமர்ந்திருந்த தங்கள் எஜமானர்களுடன் தொடர்பில் இருந்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்கு தலிபான்கள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர். பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் தனது பாதுகாப்பு, உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தலிபான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் அப்துல் கஹார் பால்கி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரயில் கடத்தல்: பாகிஸ்தானின் பச்சைப்பொய்... பெரும் கொடூரத்துக்கு தயாரான பி.எல்.ஏ..!
பால்கி தனது எக்ஸ்தளப்பதிவில், "பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் ரயில் மீதான தாக்குதலை ஆப்கானிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். மேலும், இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதற்குப் பதிலாக பாகிஸ்தான் தனது சொந்த பாதுகாப்பு, உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அப்துல் கஹார் பால்கி தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை, பலுசிஸ்தானில் உள்ள குவெட்டாவிலிருந்து பெஷாவருக்குச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பலுச் விடுதலைப் படையினரால் கடத்தப்பட்டது. இந்த ரயில் ஒரு சுரங்கப்பாதைக்கு அருகில் தண்டவாளத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் தடம் புரண்டது. இந்த ரயிலில் 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் பயணம் செய்தனர்.
We categorically reject baseless allegations by Pakistani army spokesman linking the attack on a passenger train in Balochistan province with Afghanistan, & urge Pakistani side to focus on resolving their own security & internal problems instead of such irresponsible remarks. pic.twitter.com/CVxWauCS2b
— Abdul Qahar Balkhi (@QaharBalkhi) March 13, 2025
அவர்கள் இன்னும் பலூச் விடுதலைப் படையால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், குழந்தைகள், பெண்கள் மற்றும் பலூச் பயணிகள் உட்பட மீதமுள்ள பணயக்கைதிகளை அவர்கள் விடுவித்தனர்.
இதையும் படிங்க: பலுசிஸ்தானின் பஷீர்... பாகிஸ்தான்- சீனாவுக்கும் ஒரே நேரத்தில் கற்பித்த பி.எல்.ஏ தளபதி..!