பழைய ஓய்வூதிய திட்டம் எப்போதுதான் செயல்படுத்தப்படும்.? விலாவரியாக விளக்கிய தங்கம் தென்னரசு.!!
பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்களும் அதன் சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன. 2021 தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவதாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் அரசு ஊழியர் சங்கங்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டன. என்றாலும், இது தொடர்பாக ஆராய்வதற்காக தமிழக அரசு குழு மட்டுமே அமைத்துள்ளது.
இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மகரதம் குமரவேல் சட்டப்பேரவையில் இதுபற்றி கேள்வி எழுப்பினார். “லட்சக்கணக்கான தமிழக அரசு ஊழியர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து அமைச்சர்களாக அமர வைத்துள்ளனர். அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த அதிரடி ஆக்ஷன்.. பாராட்டி தள்ளிய உ.பி. மாஜி முதல்வர் அகிலேஷ்!!
அதற்கு தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். “தமிழக அரசு ஊழியர்கள் நலனில் முதல்வர் ஸ்டாலின் மிகுந்த அக்கறையோடு உள்ளார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை மிகுந்த கவனத்தோடு பரிசீலித்து வருகிறார். அவர்கள் எதிர்பார்த்த வகையில் எனது பட்ஜெட் உரையில் பல திட்டங்களை அறிவித்திருக்கிறேன்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அரசு செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அரசு சார்பில் ஒரு குழு அமைத்துள்ளது.
அந்தக் குழுவுக்கு கால வரையறையும் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர்களுடன் தங்கள் கருத்துகளை தந்துள்ளன. அதை பரிசீலித்து உரிய நேரத்தில் சரியான முடிவுகளை அரசு எடுக்கும்” என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்.? துணை முதல்வர் உதயநிதி மெசேஜ்.!