அக்கறை இல்லை... முதல்வர் மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தமிழிசை...!
புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் அரசியல் செய்து, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை இல்லாமல் தமிழ்நாடு அரசு செயல்படுவதாக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை குற்றச்சாட்டியுள்ளார்.
புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் அரசியல் செய்து, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை இல்லாமல் தமிழ்நாடு அரசு செயல்படுவதாக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை குற்றச்சாட்டியுள்ளார்.
10000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை கையெழுத்திட மாட்டோம் 2000 கோடிக்காக கையெழுத்திட்டால் தமிழ்நாடு 200 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முக்கஸ்டாலின்தெரிவித்தார். இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாஜக மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், முதல்வரின் இந்த கருத்து தமிழக குழந்தைகளின் கல்வி மீது அவருக்கு அக்கறையே இல்லை என்பதைக் காட்டுகிறது. இது கோடிக்கணக்கு சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில், பிற மாநிலங்களில் புதிய கல்விக்கொள்கையை பின்பற்றுவது போல், தமிழக குழந்தைகளுக்கும் அந்த கல்வி கிடைக்க வேண்டும் எனக்கூறியிருக்கிறார்.
இது மொழிக் கொள்கை கிடையாது. நானே ஏற்கனவே எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன், புதிய கல்விக் கொள்கை என்பது குழந்தைகளை உலக அரங்கிற்கு உயர்த்துகின்ற விரிவுபடுத்தப்பட்ட கல்வித் திட்டம். இந்த விரிவுபடுத்தப்பட்ட கல்வித் திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் ஏற்றுக் கொள்ளும் பொழுது தமிழகமும் ஏற்றுக்கொண்டு தமிழக குழந்தைகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால் இவர்கள் அரசியல் காரணங்களுக்காக தமிழக குழந்தைகளுக்கு கிடைக்கின்ற வாய்ப்பை மறுக்கிறார்கள்.
இதையும் படிங்க: கேரளாவிலும் தாமரை மலரும்...! மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நம்பிக்கை..!
பல லட்சம் செலவு செய்து தனியார் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு கிடைக்கின்ற வாய்ப்பை. அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கிடைப்பதை தடுக்கிறார்கள். நான் ஒன்னே ஒன்னு கேட்கிறேன் இவ்வளவு துணிச்சலாக அறிவிக்கிறோம் என்று சொல்லுகின்ற முதலமைச்சர் தனி தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் தனியார் பள்ளிகளில் மூன்றாவது மொழியான இந்தியோ எந்த மொழியோ நாங்கள் கற்பிக்க மாட்டோம். நாங்கள் நடத்துகின்ற பள்ளிகளில் லாபத்திற்காக எங்கள் கட்சியினர் நடத்துகின்ற பள்ளிக்கூடங்களில் அரசாங்க பள்ளிகள் என்ன சொல்லிக் கொடுக்கப்படுகிறதோ அதைத்தான் நாங்கள் சொல்லிக் கொடுப்போம் எனச் சொல்கிற துணிச்சல் இருக்கிறதா?. இல்லை, ஏனெனில் அதை நீங்கள் வியாபாரமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
தமிழக குழந்தைகளின் படிப்பை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுல 5 ஆயிரம் கோடியோ, பத்தாயிரம் கோடியோ, 15 ஆயிரம் கோடியோ பிரச்சனை இல்லை. கடைகோடியில் உள்ள குழந்தை படிக்க வேண்டும், எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம். தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் நிலை என்ன தனியார் பள்ளிகளில் கொடுக்கின்ற சலுகைகள் ஏன்? அரசாங்க பள்ளிக்கு ஏன் கொடுக்க முடியாது? அதுக்கு ஏதாவது பதில் சொல்றாங்களா பாருங்க? முதல் அதுக்கு பதில் சொல்ல சொல்லுங்க அதற்கு பின்பு நாங்கள் சொல்கிறோம் என காட்டமாக பதிலளித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சப்போர்ட்... திமுகவுக்கு எதிராக சீமான் சொன்ன அந்த வார்த்தை...!