பெண்களை இப்படித்தான் கொடுமைப்படுத்துவீர்களா? பொங்கி எழுந்த தமிழிசை!!
இது மனசாட்சி இல்லாத ஆட்சி என தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்ததை அடுத்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக பாஜகவினர் அறிவித்திருந்தனர். அதன்படி, சென்னையில் இன்று பாஜக சார்பில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீஸார் அனுமதி அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். மறுபுறம் போராட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பாஜக தொண்டர்கள், பெண்கள் பலரும் மாலை 6 மணி ஆகியும் விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தங்களை விடுவிக்காதது ஏன் என கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதேபோல் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் போராட்டம் நடத்தியவர்களும் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் மாலை 6 மணி ஆகியும் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: நாய் ஏத்துற வண்டியில நான் ஏற மாட்டேன்..! போலீசாருடன் மல்லுக்கட்டிய ஹெச். ராஜா..!
இதனிடயே அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பாஜக பெண் தொண்டர் ஒருவர் மயக்கமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை தன்னுடைய காரில் மருத்துவமனைக்கு தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி வைத்தார். இந்த நிலையில் போலீசாருசன் பேசிய தமிழிசை சவுந்தராஜன், நாங்கள் எதற்காக போராட்டம் செய்தோம். உங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு தானே போராட்டம் செய்தோம். நாங்கள் ஏதோ தப்பு செய்தது போல எங்களை கைது செய்து வைத்திருக்கிறீர்கள். பெண்கள் பலரும் இங்கு இருக்கும் நிலையில் மாலை 6 மணி ஆகியும் எங்களை ஏன் விடுவிக்கவில்லை. எங்களை விடுவிக்க விடாமல் தடுப்பது யார்.. யார் அந்த சார் என்பதை சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களை கைது செய்வதற்கு நாங்கள் என்ன பயங்கரவாதியா?இல்லை ஊழல் செய்தோமா? தடுப்பு நடவடிக்கையாக எங்களை கைது செய்தனர். 6 மணி வரை அவர்கள் என்ன கொடுத்தார்களோ அதை சாப்பிட்டோம். 6.15 மணி வரை பொறுத்திருந்தேன். பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களை விட வேண்டும் என்று கேட்கிறேன். விடவில்லை என்றால் என்ன அர்த்தம். என்ன அடக்குமுறை இங்க நடக்குது? பெண் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கிறோம். சில பேர் மாதிரி கைதானவுடன் நெஞ்சுவலி வருவது போல பாசாங்கு செய்யவில்லை. பெண்களை விடுவிக்காமல் வைத்திருப்பதற்கான காரணம் தெரியவில்லை.
வேண்டுமென்ற எங்களை கொடுமை செய்வதற்காக நிற்க வைத்துள்ளனர். அரசியல் கட்சியினரை, அரசியல் கட்சி தலைவர்களை இப்படித்தான் இந்த அரசு நடத்துமா. இந்த செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். என்ன தவறு செய்தோம் என்று இவ்வளவு கொடுமைகள் நடக்கின்றன. மயக்கம் போட்டு விழுந்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸுக்கு கூட வழிவகை செய்யவில்லை. அரசியலில் இருக்கும் பெண்களை இப்படித்தான் கொடுமைப்படுத்துவீர்களா. டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடுபவர்களை இதுவரை விடுவிக்காமல் இந்த அரசு பழிக்கு பழி வாங்கி கொண்டிருக்கின்றனர். மனசாட்சி இல்லாத ஆட்சி. மன வேதனையாக இருக்கிறது என்றார்.
இதையும் படிங்க: முற்றுகையிட புறப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் கைது.. வாரண்ட் இருக்கிறதா என தமிழிசை வாக்குவாதம்..!