ஆதரவு தந்த பொன்னார், பி.எல் சந்தோஷ்..! வாய் திறக்காத தமிழிசை.. புகையும் பாஜக பூசல்!
தமிழக பாஜகவில் அடுத்த மாநிலத் தலைவர் யார் என்ற மோதல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இந்த போட்டியில் அண்ணாமலை Vs தமிழிசை இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அதை நிரூபிக்கும் வகையிலான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
தமிழக பாஜகவில் அடுத்த மாநிலத் தலைவர் யார் என்ற மோதல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இந்த போட்டியில் அண்ணாமலை Vs தமிழிசை இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அதை நிரூபிக்கும் வகையிலான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
தமிழிசையின் தாரக மந்திரம்:
தமிழிசை சவுந்தரராஜன் பாஜக மாநில தலைவராக இருந்த போது, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற முழக்கத்துடன் வலம் வந்தார். இதை ஆரம்பத்தில் ட்ரோல் மெட்டீரியலாக நெட்டிசன்கள் பார்த்தாலும், தமிழிசையின் தலைமை தமிழகத்தில் பாஜகவைப் பற்றி பேச வைத்தது. தமிழிசைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் பாஜகவை பெரும் வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமை அண்ணாமலைக்கு உண்டு.
இதையும் படிங்க: 13 லட்சத்தை கடந்த #GetOutStalin..! 1 இல்ல 2-ப்பே... போட்டு பொளக்கும் பாஜக ..!
தமிழிசைக்குப் பிறகு அடுத்த ஒரு சீனியர் லீடர் தான் அடுத்த தமிழக தலைவராக வருவார் என அனைவரும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்த நிலையில், தமிழக இளைஞர்களிடையே பாஜகவை வலுப்படுத்த துடிப்பான இளம் தலைவரைத் தேடிக்கொண்டிருந்தது பாஜக தலைமை. பாஜகவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே வந்தது போல், கட்சியில் இணைந்தார் கர்நாடக மாநிலத்தின் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை.
தமிழிசை Vs அண்ணாமலை:
மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தேர்தல் மூலமாக எப்படியாவது மத்திய அமைச்சர் பதவியைப் பிடித்துவிட வேண்டும் என தமிழிசையும், அண்ணாமலையும் லாபி செய்ததாக கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி சேராதது மட்டுமல்ல, பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசலும் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. குறிப்பாக பாஜக சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு அண்ணாமலை தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி புரோமோட் செய்து கொள்வது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பாஜகவில் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்தே அவரது அணுகுமுறையில் விருப்பம் இல்லாதபோதும், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட சீனியர்கள் அதனை வெளிப்படையாக கட்டிக்கொண்டதில்லை. ஆனால் முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் அண்ணாமலையை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார்.
தெலங்கானா ஆளுநர் பதவியை உதறித்தள்ளிவிட்டு தென்சென்னை தொகுதியில் எம்.பி. பதவிக்கு போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் இரண்டாம் இடம் பிடித்தார். இதன் மூலம் தமிழகத்தில் தனக்குள்ள செல்வாக்கை பாஜக தலைமையிடம் நிரூபிததார். இதனால் அவரே மீண்டும் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் தான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்திற்கு திரும்பி வந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் சமீபத்தில் வெங்கையா நாயுடு இல்லத் திருமண விழாவில் அண்ணாமலை மீது அமித் ஷா காட்டிய நெருக்கம் இந்த முறையும் பாஜக மாநிலத் தலைவராக அவரே நீடிப்பார் என்பதை உறுதிபடுத்தியுள்ளது. இதனால் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தர ராஜன் போன்ற சீனியர்கள் அப்செட்டில் இருப்பதாக கூறப்பட்டது.
கண்டுகொள்ளாத தமிழிசை:
இன்று தமிழகம் அரசியலில் பாஜகவினரால் “கெட் அவுட் ஸ்டாலின்” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டதே பேசுபொருளாக உள்ளது. கோ பேக் மோடி என சொல்லிப்பாருங்கள் என சவால் விட்டு, அதற்கு எதிர்வினையாக கெட் அவுட் ஸ்டாலின் என்பதை ட்ரெண்ட் செய்ய உத்தரவிட்டார் அண்ணாமலை. அவரது அறிவிப்பை ஏற்றுக்கொண்டு பாஜக முக்கிய நிர்வாகிகள் முதல் கடைநிலை தொண்டர்கள் வரை “கெட் அவுட் ஸ்டாலின்” ஹேஷ்டேக்கை புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக பொன்.ராதாகிருஷ்ணன் #GetoutStalin என்ற பதாகையை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்ட போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் தமிழிசை சவுந்தர ராஜன் இந்த ஹேஷ்டேக்கிற்கு பெரிதாக ரியாக்ட் செய்தது போல் தெரியவில்லை. தாய் மொழி தினம் தொடர்பாக நீண்ட நெடிய அறிக்கையை வெளியிட்டுள்ள தமிழிசை, அதில் போனால் போகுது என்பது போல் #GetoutStalin இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இருப்பது பாஜகவினர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: #GetOutStalin 10 லட்சம் ஹேஷ்டாக்… ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட ஹெச்.ராஜா..!