சட்டம் ஒழுங்கிற்கு இதுவே உதாரணம்.. சேகர்பாபுவை தூக்கத்தில் இருந்து எழுப்பச்சொன்ன தமிழிசை..!
யூ டியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்றார்.
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் நேற்று முன்தினம் துாய்மை பணியாளர்கள் போல ஆண்களும் பெண்களும் சிலர் சீருடை அணிந்து வந்தனர். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சங்கரின் தாய் கமலாவை மிரட்டினர். வீட்டில் இருந்த பொருட்களை சூறைாடினர். 'டைனிங் டேபிள்', படுக்கை அறை என எல்லா இடங்களிலும், மலத்தை வீசினர். உங்கள் மகன் துாய்மை பணியாளர்களான எங்களை அவதுாறாக பேசிவிட்டார் என கூறியபடி வீட்டை நாசப்படுத்தினர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்துக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்றார். சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்க வந்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சவுக்கு சங்கரின் வீட்டில் அவரது தாய் இருக்கும்போது தாக்குதல் நடத்தியது மிகவும் தவறு. சவுக்கு சங்கர் துப்புரவு பணியாளர்களை தவறாக பேசியிருந்தால் அதற்கு கண்டனம் தெரிவிக்கலாம். உண்மையில் துப்புரவு பணியாளர்களையும் பெண்களையும் தவறாக பேசியிருந்தால் அது தவறுதான். இருப்பினும் இருந்தாலும் வன்முறை எதற்கும் தீர்வாகாது.
இதையும் படிங்க: நாங்க பி.எச்.டி. தம்பி... நீ LKG விஜய்க்கு பதிலடி கொடுத்த சேகர் பாபு...!
சவுக்கு சங்கர் வீட்டில் இல்லாத நேரம் அவரது வீட்டில் சாக்கடை மலம் உள்ளிட்டவற்றை கொட்டி அவரது அம்மாவை பரிதவிக்க விட்டது மிகவும் தவறு. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இல்லை என நம்ப மறுக்கும் அமைச்சர் சேகர்பாபு தூக்கத்தில் இருக்கிறாரா.? நான் புதுச்சேரியில் முக்கியமான பொறுப்பை விட்டு விட்டு தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறேன். ஆனால் என்னை புதுச்சேரியில் இருக்கிறேனா என கேட்கும் சேகர் பாபுவிற்கு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியாதா.?
நான் என்னை வளர்த்த கட்சியை விட்டுவிட்டு வேறு கட்சிக்கு சென்று அம்மா வளர்த்தார் என்பதற்கு பதில் அண்ணா வளர்த்தார் என்று சொல்ல மாட்டேன். எனது பதவிகளை விட்டு விட்டு தமிழக மக்களுக்காக சேவை செய்ய வந்த என்னை புதுச்சேரியில் இருக்கிறேனா என்று கேட்கும் சேகர்பாபுவை யாராவது தூக்கத்தில் இருந்து எழுப்பி விட வேண்டும். தமிழகத்தில் சென்னையில் நெல்லையில் என தொடர்ந்து கொலை நடக்கிறது.
சட்ட உரிமை பற்றி அண்ணன் சேகர்பாபு பேசாமல் இருப்பது நல்லது. சட்ட ஒழுங்கு நன்றாக இருப்பதால்தான் தற்போது கூட ஏழு இடத்தில் வழிப்பறி நடந்து இருக்கிறது. சென்னையில் ஒரு நாளைக்கு இரண்டு கொலை நடக்கிறது நெல்லையில் 46 கொலைகள் நடந்திருக்கின்றன. ஆனாலும் சட்ட ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று சொன்னால் முதலமைச்சர். மு.க ஸ்டாலினுக்கும் சேகர்பாபுவுக்கும் சட்ட ஒழுங்கின் அளவீடு என்ன என்பது எனக்கு தெரியவில்லை என தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சித்தார்.
இதையும் படிங்க: காலையிலேயே கையில் கருப்புக்கொடியுடன் வந்த தமிழிசை... 3 மாநில முதல்வர்கள் முன்னாடி மு.க.ஸ்டாலினுக்கு நேர்ந்த அவமானம்...!