×
 

ஓ.பி.சிக்கு 42% இடஒதுக்கீடு... தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி மாபெரும் அறிவிப்பு..!

கல்வி, வேலைகள், வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என அனைத்துத் துறைகளிலும் இந்தப் பிரிவினருக்கு 42 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்.

தெலுங்கானா அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்புகள், அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஓபிசி மக்களுக்கு 42% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி, ''நாட்டில் சமூகப் புரட்சியை வழிநடத்துவதில் தெலுங்கானா பெருமை கொள்கிறது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நீண்டகால கோரிக்கை இறுதியாக நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன். பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளின் விருப்பம், அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பில் கணக்கிடப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது நிறைவேறி உள்ளது.

இதையும் படிங்க: நிதி நெருக்கடி: தாமதமாகும் அரசு ஊழியர்களின் சம்பளம்: வேதனையோடு ஒப்புக்கொண்ட முதல்வர்..!

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை அனைவரும் ஆதரிக்க வேண்டும். இன்று தெலுங்கானா சட்டமன்றத் தலைவராக, தெலுங்கானாவில் ஓபிசி மக்கள் தொகை 56.36 சதவீதமாக உள்ளது என்று என்னால் கூற முடியும். இப்போது கல்வி, வேலைகள், வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என அனைத்துத் துறைகளிலும் இந்தப் பிரிவினருக்கு 42 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதாக நாங்கள் உறுதியளிக்கிறோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை நாம் ஒவ்வொருவரும் ஆதரிப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.

கடன் சுமை குறித்துப் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ''இந்தச் சுமை, பிற காரணங்களால் எங்கள் மாநில அரசு பண நெருக்கடியை எதிர்கொள்கிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.4 ஆயிரம் கோடி கடனைப் பெற்ற பிறகு, அரசும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடிந்தது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சம்பளம் கொடுப்பது கடினம். அரசு ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சம்பளத்தைப் பெற்று அரசுக்கு சேவை செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். சில நேரங்களில் நாம் வங்கியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். நான் 4 ஆயிரம் கோடி ரூபாய் கைக் கடன் வாங்கி சம்பளம் கொடுத்துள்ளேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையமா? இ.பி.எஸ். கண்டனம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share