×
 

குற்றமே நடக்கலைன்னு சொன்னோமா..? விஜய்க்கு திமுக எம்.பி. பதிலடி..!

பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து திமுக அரசை விமர்சித்த விஜய்க்கு தங்கத் தமிழ்ச்செல்வன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்துள்ளது... காவல்துறையை கட்டுப்பாட்டுடன் முதல்வர் கையாண்டு வருகிறார் என தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிடாவிருந்து அளிக்கப்பட்டது.

 தேனி பாராளுமன்ற தொகுதி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் பேரூராட்சி பணியாளர்களுக்கு புத்தம் புதிய சீருடை, ஊக்கத்தொகை வழங்கி விருந்து வழங்கப்பட்டது. 

இதையும் படிங்க: தேனி, திமுகவில் கடும் சண்டை..! அறிவாலயத்தில் பஞ்சாயத்து.. உள்ளடி ரிப்போர்ட்..!

விழாவின் முடிவில் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மகளிர் தின விழா வீடியோவில் திமுக அரசை விமர்சித்து விஜய் பேசியுள்ளது குறித்து கேட்டபோது, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற இந்த 4 வருடத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது. 

காவல்துறையை முதலமைச்சர் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கிறார். ஆங்காங்கே ஒரு சில குற்றங்கள் நடைபெறுகிறது. குற்றங்களை நடைபெறவில்லை என நாங்கள் கூறவில்லை.  ஆனால் அந்த குற்றங்களை கட்டுப்படுத்துவதில் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் விளக்குகிறார். இதுவரை நடைபெற்ற ஆட்சியில் அவருக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்படவில்லை. எனவே 2026 தேர்தலிலும் அவரே மீண்டும் முதல்வராவார்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவற்றில் 90 சதவீதம் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை அதனை திசை திருப்பவே மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்து அரசியல் செய்கின்றனர் என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர் என்ற கேள்விக்கு,எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதிலும் ஒரு எல்லை இருக்க வேண்டும். முதலமைச்சர் கூறிய வாக்குறுதிகளில் எதனை நிறைவேற்றவில்லை என தெளிவாக குறிப்பிட வேண்டும். ஒரு கோடியே 18 லட்சம் மகளிர்க்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது, Nநான்கு கோடி பெண்கள் அரசு பஸ்ஸில் இலவச பயணம் செய்து வருகின்றனர்.

இது தவிர வாக்குறுதியில் கூறாத பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் என சொல்லாத பல வாக்குறுதிகளையும் முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைத்தொகை, இன்றும் கூட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கோடிக்கணக்கான நிதியுதவி வழங்கியுள்ளார். இப்படி அவர் செய்த சாதனைகளை அடக்கி கொண்டே போகலாம். அதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர் இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என்றார்.

 

2026 தேர்தலில் அதிமுக பாஜக த.வெ.க கூட்டணி அமைக்கப்படுவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது, அவ்வாறு கூட்டணி அமைந்தால் திமுக எப்படி எதிர்கொள்ளும் எனக் கேட்டபோது, திமுக கூட்டணி ஒரு வலுவான கூட்டணி. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல.  சுயமரியாதைக்கான கூட்டணி மதவாதத்தை எதிர்க்கும் கூட்டணி. எனவே மக்கள் எங்களுக்குத் தான் ஆதரவு தருவார்கள் மு க ஸ்டாலின் மீண்டும் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

இதையும் படிங்க: விஜய் இருந்த இடத்தில் ரூ.1லட்சம் திருட்டு... போலீசார் திணறல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share