×
 

இஸ்லாமியர்களை பாஜகவுடன் இணைப்பதே நோக்கம்... மோடியின் அடுத்த அஸ்திரம்..!

எங்கள் ரஸ்கான் ஒரு முஸ்லிம்... ஆனால், அவர் ஹரியின் பக்தர்'' எனக்கூறி இஸ்லாமியர்களை வசப்படுத்தும் முயற்சிக்கு விதைத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஜஹான்-இ-குஸ்ரோவின் 25வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சூஃபி பாரம்பரியத்தையும், 13 ஆம் நூற்றாண்டின் சூஃபி கவிஞரும் இசைக்கலைஞருமான அமீர் குஸ்ரோவையும் புகழ்ந்து தள்ளின்னார். '' சூஃபித்துவத்தை இந்தியாவின் பன்முக பாரம்பரியம். சூஃபி துறவிகள் குர்ஆனிலிருந்து வசனங்களை ஓதுவார்கள். வேதங்களையும் கேட்பார்கள்'' என்று மோடி புகழ் சேர்த்தார்.

 

சூஃபி கலாச்சார நிகழ்வில் பிரதமர் மோடியின் பேச்சு, இந்தியாவில், சூஃபி கலாச்சாரத்தை பின்பற்றும் மக்களைலக் கவர ஆளும் பாஜக தொடர்ச்சியான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்த முயற்சியின் பயனாக, இந்தியா முழுவதும் உள்ள சூஃபி கான்காக்கள், அவர்களை பின்பற்றுபவர்கள் என 14 ஆயிரம் பேரை பாஜக சிறுபான்மை மோர்ச்சா 2022 ஒன்றிணைத்துள்ளது.

இதையும் படிங்க: முதல்வரே டிராமா போட தயாராகிவிட்டார்... பின்னணியைச் சொல்லி தெறிக்கவிட்ட வானதி சீனிவாசன்.!

இந்திய இஸ்லாத்தின் சாரமாக சூஃபித்துவத்தை முன்வைப்பதும், அதன் பன்முக மரபுகளை முன்னிலைப் படுத்துவதும் பாஜகவின் இந்த திட்டத்தின் மையம் என்று பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். தற்போதைய முஸ்லிம் கவிஞர்களிடையே, கிருஷ்ணர் போன்ற இந்து தெய்வங்களை வணங்கியதற்கான சான்றுகள் உள்ளன. பாஜக சிறுபான்மை மோர்ச்சாவின் தேசியத் தலைவர் ஜமால் சித்திக் கூறுகையில், 'இந்த நிகழ்ச்சியின் மூலம் முஸ்லிம்களைப் புரிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற செய்தியை பிரதமர் வழங்கியுள்ளார்' என்று அவர் கூறியுள்ளார்.

''சூஃபித்துவம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. சூஃபித்துவத்தால் பிடிவாதத்தை எதிர்த்து அமைதியை மேம்படுத்துவதில் பங்களிக்க முடியும். இதன் நோக்கம், மனிதர்களுக்கு கடவுளுடன் நேரடி தொடர்பை வழங்குவது. கடவுளை அல்லா, ராமர், கிருஷ்ணர், கிறிஸ்து அல்லது வாஹே குரு என பல்வேறு மக்கள் வழிபடலாம். இந்தியாவில் சூஃபித்துவம் வீழ்ச்சியடைந்து இருந்தாலும் அதன் ஆர்வம் இப்போது அதிகரித்துள்ளது. இந்த ஆர்வம் முஸ்லிம்களையே அதிகம் பாதிக்கிறது. சூஃபித்துவம் சமூகத்தின் எல்லைகளுக்குள் செயல்படுவதில்லை. பன்மைத்துவ கலாச்சாரம்தான் அதன் ஆன்மா'' எனத் தெரிவித்துள்ளார்.

பாஸ்மண்டா முஸ்லிம் சமூக நலனைப் போலவே, சூஃபித்துவத்தின் மீதான பாஜகவின் கவனம், நாட்டின் மிகப்பெரிய மத சிறுபான்மையினரை இலக்காகக் கொண்ட அதற்கு இணையான சமூக நலத் திட்டம். 2023 ஆம் ஆண்டு லக்னோவில், பாஜக சிறுபான்மை மோர்ச்சா சூஃபி சம்வாத் மகா அபியான்  கலந்துரரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் 100க்கும் மேற்பட்ட தர்காக்களைச் சேர்ந்த சுமார் 200 சூஃபிகள் கலந்து கொண்டனர். 

மோடி அரசின் கொள்கைகள், திட்டங்களைப் பற்றி நடுநிலை முஸ்லிம்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு இந்தியா முழுவதும் 22 மாநிலங்களில் உள்ள சூஃபிகளை அணுக பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டன. 2023 லக்னோ மாநாட்டில் 'தூரம் இல்லை... இடைவெளி இல்லை... மோடி எங்கள் சகோதரர்' என்ற முழக்கம் உருவாக்கப்பட்டது.

பாஜக சிறுபான்மை மோர்ச்சாவின் தலைவர் ஒருவர், ''சூஃபிகளை பாஜகவில்  சேர்க்கக் கூடாது என்பதுதான் எங்கள் சமூகத்தில் இருந்து வந்த உத்தரவு. அதற்கு பதிலாக, நடுநிலையான முஸ்லிம்களுடன் இணைப்பதற்காக அவர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்துவதே எங்கள் நோக்கமாக இருந்தது. இந்த முயற்சியின் மூலம் கட்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இஸ்லாம் மக்களின் கோரிக்கைகள் பற்றி அறிந்து கொண்டோம். இவற்றை அரசிடமும் இப்போது தெரிவித்து வருகிறோம்'' என அவர் கூறினார்.


பெரும்பான்மை சமூகத்தின் நலன்களுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கட்சியாக பாஜகவைப் பார்ப்பதால், முஸ்லிம் சமூகம் ஒருபோதும் அதற்கு ஆதரவளித்ததில்லை. இருப்பினும், நாட்டில் உள்ள இந்துக்களின் பெரும் பகுதியினர் ஏற்கனவே அதன் செல்வாக்கின் கீழ் இருந்தாலும், பாஜக படிப்படியாக முஸ்லிம்களையும் சென்றடைய முயற்சிப்பதாக கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

பாஜகவின் பாஸ்மந்தாவின் நோக்கம் பின்தங்கிய வகுப்பு முஸ்லிம்களை இலக்காகக் கொண்டது. அதே நேரத்தில் சாதி என்பது இந்துக்களின் பிரச்சினை மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து சமூகங்களிலும் பரவியுள்ளது என்று முன்னிறுத்தி வருகிறது.

சூஃபி நிகழ்வில் ஆற்றிய உரையில், பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது சர்கேஜ் ரோஜாவை எவ்வாறு மீட்டெடுத்தார் என்பதை எடுத்துக் கூறப்பட்டது. அது அகமதாபாத்தில் உள்ள ஒரு சூஃபி மசூதி மற்றும் கல்லறை வளாகம். 'நான் முதல்வராக இருந்தபோது, ​​சர்கேஜ் ரோஜா புணரமைப்பில் நிறைய பணிகளை செய்து கொடுத்தோம். சர்கேஜ் ரோஜாவில் கிருஷ்ண உற்சவ விழா ஆர்ப்பாட்டமாக கொண்டாடப்பட்ட ஒரு காலம் இருந்தது என்பது மிகச் சிலருக்குத் தெரியும். இன்றும் கூட, இங்குள்ள அனைவரும் கிருஷ்ண பக்தியில் மூழ்கியிருக்கிறோம்' என்று மோடி கூறினார்.

குஸ்ரோவைப் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, ''கவிஞர் இந்துஸ்தானில் சொர்க்கத்தைக் கண்டுருகிறார். இந்தியாவில் சூஃபி பாரம்பரியம் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது. சூஃபி துறவிகள் தங்களை மசூதிகள், கான்காக்களுடன் மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் புனித குர்ஆனைப் படித்தார்கள். வேதங்களையும் கேட்டார்கள். அவர்கள் அஸானின் ஒலியுடன் பக்திப் பாடல்களின் இனிமையையும் சேர்த்தார்கள் இது உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்தை ஒத்திருந்தது. பாருங்கள், எங்கள் ரஸ்கான் ஒரு முஸ்லிம்... ஆனால், அவர் ஹரியின் பக்தர்'' எனக்கூறி இஸ்லாமியர்களை வசப்படுத்தும் முயற்சிக்கு விதைத்துள்ளார்.

இதையும் படிங்க: சொந்த ஊரில் விலை போகாத ஆடு ! அமைச்சர் செந்தில் பாலாஜி கலாய்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share