“திக்..திக்... பயணம்...” பாதி வழியில் பற்றி எரிய வாய்ப்பு... சுனிதாவின் விண்கலம் பத்திரமாக தரையிறங்குமா?
சுனிதா வில்லியம்ஸ் ஒரு வழியாக பத்திரமாக பூமிக்கு வரும் நேரத்தை உலகமே ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்நிலையில் விண்கலம் தரையிறங்கும் போது என்னென்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கக்கூடும் என பார்க்கலாம்...
சுனிதா வில்லியம்ஸ் ஒரு வழியாக பத்திரமாக பூமிக்கு வரும் நேரத்தை உலகமே ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்நிலையில் விண்கலம் தரையிறங்கும் போது என்னென்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கக்கூடும் என பார்க்கலாம்...
நிலவுக்கு முதன்முதலில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் குழு பூமிக்கு திரும்பும் போது மோசமான வானிலையால் 400 கிலோ மீட்டர் தூரம் தள்ளி கடலில் தரை இறங்கியது. அதேபோன்ற ஒரு சவால்தான் சுனிதா வில்லியம்ஸ் வந்திறங்கும் அமெரிக்காவின் ப்ளோரிடா கடலிலும் உருவாகி இருக்கிறது. முதலில் ப்ளோரிடா கடற்பரப்பில் ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 டிராகன் கேப்சூல் விண்வெளி வீரர்களுடன் வந்திரங்க புதன்கிழமை தான் தேதி குறிக்கப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவர்கள் முன்கூட்டியே புறப்படுகின்றனர்.
இந்திய நேரப்படி 18 மார்ச் 2025 காலை 10:15 மணிக்கு புறப்பட தயாராகும் டிராகன் கேப்சூல் சரியாக காலை 10:30 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும், 39000 கிலோ மீட்டர் வேகத்தில் கேப்சூல் விறுவிறுவென பூமியை நோக்கி பாயும் அந்த கேப்சூலுக்குள் சுனிதா வில்லியம்ஸ், பூச் வில்மோர், நிக்ஹாக் அலெக்சாண்டர் கார்பனோ ஆகியோர் பயணிக்கவுள்ளனர்.
இதையும் படிங்க: சுனிதா, வில்மோர் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு புறப்படத் தயாராகினர்... எப்போது பூமிக்கு வந்து சேர்வர்..?
தரையிறங்குவதில் உள்ள சிக்கல்கள்:
இந்த பயணத்தில் மூன்று இடங்களில் உள்ள சவால் உயிருக்கே ஆபத்தாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது நீர், காற்று, நெருப்பு வடிவத்தில் அந்த 3 சவால்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
முதல் ஆபத்து என்ன?
முதலில் தீ தான் மிகப்பெரிய எதிரி எனக்கூறப்படுகிறது. விண்வெளி இருந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் அதிவேகமாக நுழையும் எந்த பொருளும் தகதகவென பற்றி எரியும், அதற்கு காரணம் வளிமண்டலத்தில் உள்ள காற்றுத் துகழ் மீதும் அங்கு பரவி இருக்கும் கேஸ் மீதும் எந்த பொருள் மோதினாலும் தீப்பற்றிக் கொள்ளும் கேப்சூலின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் தீப்பிளம்புகளுக்குள் குதித்ததுப் போன்று நெருப்புச் உள்ளே இருப்பவர்களை மிரட்டும். கிட்டத்தட்ட 7000 ஃபாரன்ஹீட் வெப்பம் தகிக்குமாம். வெப்பத்தை தாங்கும் வகையில்தான் அந்த கேப்சூலும் அதனுள் இருப்போருக்கான கவச உடையும் வடிவமைக்கப்பட்டிருக்கும் எனக்கூறப்படுகிறது.
காற்றால் காத்திருக்கும் ஆபத்து:
பலகட்ட செயற்கை பரிசோதனைகளுக்கு பின்பே அவகூட் என்ற மெட்டீரியல் கொண்டு அந்த கவச உடை பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும். இந்த நெருப்பின் கோர நாக்கில் சிக்காமல் தப்பினால் அவர்களை விழுங்கி ஏப்பம் போட காத்திருக்கும் அடுத்த ஆபத்து காற்று என கணிக்கப்பட்டுள்ளது. ஆம், பூமியிலிருந்து 50 கிலோமீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் உயரத்தில் காற்றின் அழுத்தம் காரணமாக அந்த கேப்சூலுக்கு கடும் அழுத்தம் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதையும் தாங்கும் வகையிலேயே கேப்சூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சமயம் விண்வெளி வீரர்களுக்கு தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் வரலாம் என்றும், அந்த அழுத்தத்தை எதிர்கொள்ளவும் ஒரு தொழில்நுட்பம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதாவது கேப்சூலின் வேகம் பூமிக்கு நெருங்கியதும், அதிசயக்க வைக்கும் ஹைப்பர்சோனிக் வேகத்திலிருந்து அப்படியே வேகம் குறையும் எனக்கூறப்படுகிறது. 39000 கிலோமீட்டர் வேகமானது சில நிமிடங்களுக்குள்ளேயே திடீரென 800 கிலோ மீட்டர் வேகமாக குறைந்துவிடும். ஆனால் அதே வேகத்தைக் கொண்டு தரை இறங்க முடியாது என்பதால் பாராசூட்டுகள் விரிந்து காற்றிற்கு எதிராக ஒரு பிரேக் போட உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடலில் தத்தளிக்க வாய்ப்பா?
மெதுமெதுவாக நிர்ணயிக்கப்பட்ட ப்ளோரிடா கடற்பகுதியில் அந்த கேப்சூல் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆபத்து நீர் தான் அதிலிருந்து மீட்கப்பட்டு தரைக்கு அழைத்து வரப்படுவர். அப்போது அவர்களுக்கு வானிலை வழிவகுக்காவிட்டால் அங்கும் ஆபத்து காத்திருக்கலாம். வானிலை கடல் சீற்றம் மோசமாக இருக்கும் இடத்தில் தரை இறங்காதிருக்க தேவையான மாற்று வழிகளை ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் தயாராக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாசா முயற்சித்து முடியாத சவாலை தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஒரே வாரத்தில் சாதிக்க இருக்கிறது இது அந்நிறுவனத்தின் கமர்சியல் விண்வெளி பயணத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கக் கூடும் என்பதால், அந்நிறுவனம் கூடுதல் சிரத்தையோடு சுனிதா உள்ளிட்ட வீரர்களை அழைத்து வருகிறது. எல்லாம் திட்டமிட்ட நடந்தால் எந்த ஆபத்தும் நெருங்காமல் மார்ச் 19 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 3:27 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார். அந்த தருணத்துக்காகத்தான் பலரும் பிரார்த்தனைகளோடு காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் நாளை பூமிக்கு திரும்புகிறார்கள்.. நாசா அறிவிப்பு..!