×
 

மாறும் களம்… வியூக சாலை… அரசியலில் விஜயின் நண்பர்கள் யார்..? எதிரிகள் யார்..?

தமிழ்நாட்டில் விஜயை ஆதரிப்பவர்கள் யார்? எதிர்ப்பவர்கள் யார்? அரசியல் கட்சிகள் விஜய் விஷயத்தில் எடுக்கிற நிலைப்பாடுகள் என்ன? 

தவெக தொடங்கி ஓராண்டுக்கு மேலாகி உள்ள நிலையில் கட்சியின் உட்புற கட்டமைப்பை வலுப்படுத்த மாவட்ட நிர்வாகிகளை நியமித்து 2026 தேர்தல் களத்திற்கு தயாராகி வருகிறார் விஜய். கட்சிக்கு ஒரு வியூக வகுப்பாளர் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் கட்சியின் தொடர்பில் மூன்று வியூக வகுப்பாளர்களுடன் களமிறங்கி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது தவெக. இந்த நிலையில் கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை ஒரு சில நிகழ்வுகளை தவிர விஜய் பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. விஜயையும், தவெகவையும் பிற  அரசியல் கட்சிகள் 2026 தேர்தல் கணக்குகளை மனதில் வைத்து பெரிய அளவில் விமர்சிக்காமல் தவிர்க்கின்றன. 

விஜயோ, திமுக, பாஜக நேரடியாக தன்னுடைய எதிரி என்று அறிவித்தார்.தவிர மற்ற கட்சிகளை இன்னும் அவர் விமர்சிக்கவே இல்லை. இதற்கு பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகளையும் பார்க்க வேண்டி உள்ளது. தமிழ்நாட்டில் விஜயை ஆதரிப்பவர்கள் யார்? எதிர்ப்பவர்கள் யார்? அரசியல் கட்சிகள் விஜய் விஷயத்தில் எடுக்கிற நிலைப்பாடுகள் என்ன? 

இதையும் படிங்க: 'செங்கோட்டையன், எடப்பாடியாரை விட பெரிய கொம்பனா..?' விஜயை விமர்சித்தது ஏன்? - சீமான்

விஜய் கட்சி ஆரம்பித்து தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் உள்ள 'வி'சாலையில் நடத்தினார். விஜய் அப்போது இது 'வி'சாலையில்லை. வியூக சாலை என்று சொல்லி கட்சி கொள்கைகளை அறிவித்தார். விஜய் இப்போது மூன்று வியூக வகுப்பாளர்களை வைத்து அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார். தவெகவின் கொள்கைகளாக திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என சொன்னபோது இரண்டும் ஒன்றாகவே இருக்க முடியாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளிப்படையாக விமர்சித்தார்.

மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் வாக்குகளை நாம் தமிழர் பக்கம் வைத்திருப்பதாக சீமான் சொல்லி வருகின்ற நிலையில் அந்த வாக்குகள் விஜய்க்கு போய் விடுமோ? என்கிற அச்சத்தால் தான் சீமான், விஜயை விமர்சிக்கிறார் என்கிற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.பெரியாரை தனது கொள்கை தலைவராக அறிவித்திருக்கிற விஜய், சீமான், பெரியார் பற்றி பேசியதற்கு வாய் திறக்காமல் இருப்பதும், பிரதான கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் இருந்து மட்டுமே விமர்சனம் வந்துள்ளன. ஆனால் விஜயை நோக்கி நேரடியாக எந்த கட்சிகளும்  விமர்சித்தது.

நீட் தொடர்பாகவோ, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாகவோ தமிழக அரசை விஜய் விமர்சித்து வந்தாலும் திமுக தரப்பினரிடம் இருந்து இரண்டாம் கட்ட தலைவர்களே பதிலளித்தார்கள். விமர்சனத்தை முன் வைத்தார்கள். விசிகவை பொறுத்தவரை திருமாவளவன், விஜய் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.''கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என்பது ஒன்றும் பண்டிகை கால தள்ளுபடி இல்லை. போதிய அரசியல் அனுபவம் இல்லாமல் விஜய் இருக்கிறார்'' என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார் விசிக தலைவர் திருமாவளவன். அதிமுகவின் நிறுவனத் தலைவரான எம்.ஜி.ஆரை தன்னுடைய கட்சி கொள்கை விளக்க பாடல்களிலும், தனக்கான வழிகாட்டியாகவும் சொன்ன விஜயை விமர்சித்து அதிமுகவும் எந்த பெரிய விமர்சனமும் வைக்கவில்லை.

சார்பு அணியில் சிறார் அணி உருவாக்கியதை பாஜக தலைவர் அண்ணாமலை மறைமுகமாக விமர்சித்ததும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. விஜய்க்கு நேரடியாக எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேபோல  2026-ல் எந்த கட்சியுடன் பயணிப்போம் என்று விஜய்யும் இதுவரை தெரிவிக்கவில்லை. இருந்தது போதும்தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ''இந்திய கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்போம்'' என்று சொன்னது விஜயை ஆதரிக்கும் குரலாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட போது அதிமுக தரப்பில் இருந்து 'விஜயை, பாஜக பக்கம் இழுக்கத்தான் இந்த நடவடிக்கை' என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதும் மறைமுகமான விஜய் ஆதரவாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுகவுடன், விஜய் கூட்டணி அமைய வியூக வகுப்பாளர்களைக் கொண்டு வேலை நடப்பதாகவும் அதனால்தான் தவெகவுக்கு சென்ற பிறகு நிர்மல் குமார் கூட நீக்கப்பட்டதாக இன்னும் அதிமுக தரப்பில் அறிக்கை வெளியிடவில்லை. தேமுதிக தேர்தல் களத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தாலும் ஒருவேளை ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்றால் தேமுதிகவினர் விஜய்யை ஆதரிப்பார்களா? ஆதரவும், எதிர்ப்பும் இன்னும் தவெகவுக்கு முழுமையாக வரவில்லை. என்றாலும் ஒவ்வொரு தனிப்பட்ட நிகழ்வுகளுக்கும் விஜய் கருத்து தெரிவிக்க வேண்டும். ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை என்பதும் விஜய் மீது வைக்கப்படும் விமர்சனமாக இருக்கிறது. இதையெல்லாம் விஜய் செய்யும் போது களத்தில் அவரை ஆதரிப்பது யார்? எதிர்ப்பது யார்? என்கிற கேள்விக்கு விடை தெரிந்து விடும். 

இதையும் படிங்க: தேர்தலில் ஓட்டு பிச்சை எடுக்காமல் தானம், தர்மமா கேட்கிறீர்கள்?... - அண்ணாமலையை கலாய்த்த சீமான்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share