×
 

யானைகள் அட்டகாசம் ..கலங்கி நின்ற விவசாயிகள் ..அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அமைச்சர் ..!

பயிர்களையும், தென்னமரக் கன்றுகளையும் நாசம் செய்யும் யானைக்கூட்டங்கள் கும்கி யானைகளை வரவழைத்து விரட்டி அடிக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்துள்ளார்

நீலமலைக்கோட்டை பகுதியில் தென்னந்தோப்புக்குள் புகுந்த  யானைகள் தென்னங்கன்றுகளை நாசம் செய்ததோடு, அருகில் உள்ள  தோட்டத்தில் மக்காச்சோள பயிர்களையும் நாசம் செய்தன. அப்பகுதி  விவசாயிகள் அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து யானைகளை கட்டுப்படுத்த  கோரிக்கை மனு கொடுத்தனர். உடனடியாக அப்பகுதிக்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி யானைகளால் நாசம் செய்யப்பட்ட  பயிர்களை பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

 வனத்துறை மூலம் விவசாயிகளின்  நலன் காக்க அறிவுறுத்தி வருகிறேன். இருந்தும் யானைகள் கூட்டம் கூட்டமாக  வந்து மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய  நிலங்களை நாசப்படுத்தி விட்டு சென்று விடுகின்றன. இம்முறை கூட்டமாக  வந்துள்ள யானைக்கூட்டம் அதிக அளவில் சேதப்படுத்தி உள்ளன. பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல  கும்கி யானைகளை வரவழைத்து யானைக்கூட்டங்களை விரட்டி அடிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய பெரியசாமி  தமிழகத்தில் விவசாயிகளின் நலன் காக்கும்  அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. மு.க.ஸ்டாலின்  கவனத்திற்கு கொண்டு  சென்று மேற்குத் தொடர்ச்சி அடிவார பகுதி விவசாயிகளின் நலன்கள்  காக்கப்படும். இந்த சட்டமன்ற தொடரிலே இதுகுறித்து நான் பேச உள்ளேன். தொடர்ந்து வனத்துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து இங்குள்ள  நிலைமைகளையும் எடுத்து சொல்வேன் என்றார்.

இதையும் படிங்க: யானை தந்தத்தில் விநாயகர் சிலை..வாலிபரை தட்டித்தூக்கிய வனத்துறை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share