குட்டி தளபதியின் பேண்டில் தூசி தட்டிய அமைச்சர்… இன்பநிதியின் நண்பர்களுக்காக உதயநிதி முன் அசிங்கப்பட்ட பெண் கலெக்டர்..?
தயா அழகிரியை 2010-ல் இதே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மேடையில் முன்னிலைப்படுத்தினார் மு.க.அழகிரி. 2011 தேர்தலில் திமுக காலியானது.
மதுரை,அலங்கநால்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க, துணை முதல்வர் உதயநிதியுடன், அவரது மகன் இன்பநிதியும் வந்திருந்து போட்டியைக் கண்டு ரசித்தது திமுகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக நிர்வாகிகள் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் இன்பநிதியிடம் பவ்யம் காட்டியது, சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு அவரை வைத்து பரிசு கொடுக்க வைத்தது என மேடையில் நடந்த சில நிகழ்வுகள் ஜல்லிக்கட்டு களத்தை தாண்டி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஜல்லிக்கட்டை ரசிக்க வந்த பலரும், உதயநிதி- இன்பநிதி இருவரின் செயல்பாடுகளை மட்டுமே கண்கொட்டாமல் பார்த்து சிலாகித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர், ''இந்த அப்பா- பையன் காம்போவை பார்க்கும்போது கண்ணே பட்டுடும் போல" என மெச்சுக்கொட்டியது ஆஹா ரகம்.
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியை மாண்புமிகு தமிழ்நாட்டு துணை முதலமைச்சர் உதயநிதி துங்கி வைத்தபோது அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி.அடுத்த நொடியே
வாங்கய்யா சின்னய்யா என இன்பநிதிக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் அமைச்சர் மூர்த்தி! ஜல்லிக்கட்டு பேட்ஜை அமைச்சர் உதயாநிதிக்கு வழங்க அதை மாட்டிக்கொண்ட துணை முதல்வர் உதயநிதி, இன்னொரு பேட்ஜை வாங்கி தனது வாரிசு இன்பநிதியின் டீ-சர்ட்டில் மாட்டி விட்டார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலால் வளர்ந்த கட்சி அதிமுக.. இன்று இடைத்தேர்தலை கண்டு அஞ்சுகிறதா?
"இன்பா இன்பா அங்க பாரு..." வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளையை காட்ட, அதை உற்றுப்பார்த்தார் உற்று பார்த்தார் இன்பநிதி. இப்படி தன் மகனுடன் சேர்ந்து கண்டு ரசித்த துணை முதலமைச்சர் உதயநிதி, தன் வாரிசு இன்பநிதிக்கு சூஸ் கொடுத்தார். அதை மறுத்த இன்பநிதி ,"வேணாம்ப்பா... வேணாம்ப்பா…'' என மறுக்க ''பரவாயில்ல சாப்புடு.." என
ஜல்லிக்கட்டு போட்டியின் போது மகனை ஜூஸ் குடிக்க வைத்தார் துணை முதல்வர் உதயநிதி.
ஒரு வீரர் காளையை அடக்க முயன்றபோது மாட்டின் கொல்ம்பில் தூக்கி வீசப்பட்டார். அதனை கவனித்துக் கொண்டிருந்த இன்பநிதி சற்று நடுங்கித்தான் போனார். உதயநிதி அருகில் உட்கார்ந்து ஜல்லிக்கட்டை ரசித்துக் கொண்டிருந்த உதயநிதி தன்னுடன் வந்திருந்த 4 நண்பர்கள், மேடையின் பின் வரிசையில் அமர வைக்கப்படிருந்தனர். அப்போது தானும் பின் வரிசைக்கு செல்ல முயன்றார் இன்பநிதி, உடனே பதறிப்போன அமைச்சர் மூர்த்தி, ''ஐயோ குட்டித் தளபதி... நீங்க ஏன் அங்கே போறீங்க. உங்க நண்பர்கள் முன் வரிசைக்கு வந்து உட்காரட்டும். நீங்க வாங்க'' என முன் வரிசையில் உதயநிதி அருகில் முன் வரிசையில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை தள்ளி உட்கார வைத்து விட்டு இன்பநிதியின் நண்பர்களை முன் வரிசையில் உட்கார வைத்தார் அமைச்சர் மூர்த்தி. மாவட்ட ஆட்சியரை அமைச்சர் மூர்த்தி அவமதித்து விட்டார் என கொதிக்கிறார்கள் எதிர்கட்சியினர்.
மகன் இன்பநிதி, அவரது மகன்களுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ட்ரோன் ஆபரேட் செய்து மகிழ்ந்தார் துணை முதல்வர் உதயநிதி. இன்பநிதியின் பேண்டில் ஒட்டியிருந்த தூசியை துடைத்து விட்டார் அமைச்சர் மூர்த்தி. ''என் தோளை தாண்டி வளர்ந்ததனால் என் தோழன் நீ அல்லவா...'' என உதயநிதி, இன்பநிதியுடன் நேற்று பதிவிட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர் திராவிடல் மாடல் ஆட்சியால் சிலாகித்துக் கிடக்கும் உடன்பிறப்புகள்.
போட்டியின்போது சில நேரங்களில் சிறந்த மாடுபிடி வீரர், காளைகளுக்கு தங்காசுகளை துணை முதல்வர் உதயநிதி தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார். விழா குழுவினர் அவரது மகன் இன்பநிதியிடமும் தங்க நாணயத்தைக் கொடுத்து பரிசு கொடுக்க வைத்தனர்.உதயநிதியும், அவரது மகன் இன்பநிதியும் சுமார் 2.30 மணி நேரம் வரை பார்த்து ரசித்து அதன்பிறகு, நிர்வாகிகளிடமும், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினரிடமும் விடைபெற்றுச் சென்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வந்திருந்த உதயநிதி, இன்பநிதி ஒன்றாக விழா மேடையில் சேர்ந்திருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பதிவிட்டு ‘திமுகவில் அடுத்த தலைமுறை உதயம்’ என பதிவிட்டு வருகிறார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ‘இன்பநிதி’ வருகை திமுகவில் மட்டுமில்லாது அரசியல் வட்டாரத்தில் ‘கவனம்’ பெற ஆரம்பித்துள்ளது.
இதனை பார்த்து வயிற்றெரிச்சலில் உள்ள எதிர் தரப்பினர் ''அனைத்து இடங்களிலும் குட்டி வாரிசை முன்னிலை படுத்தல் ஆரம்பம் ஆகிவிட்டது... அமைச்சர்கள் சேவகமும் ஆரம்பமாகி விட்டது. தயா அழகிரியை 2010-ல் இதே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மேடையில் முன்னிலைப்படுத்தினார் மு.க.அழகிரி. 2011 தேர்தலில் திமுக காலியானது. இப்போது இன்பநிதியை முன்னிறுத்துகிறார்கள். மறுபடியும்... 2026 தேர்தலில் திமுக காலியாவது உறுதி''எனக் குமுறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ’சிலர் கட்சியை மீறி தனது லாபத்துக்காக செயல்படுகிறார்கள்’.. அண்ணாமலையை வைத்துக்கொண்டே கலாய்த்த குருமூர்த்தி