×
 

இதுதான் இறுதி அஸ்திரம்..! இ.பி.எஸுக்கு எதிராக ஓ.பி.எஸ் டீம் போட்ட பகீர் சபதம்- கிளப்புங்கள் வண்டியை...

பழனிசாமி... சேலத்தில் இருந்து சொல்கிறேன்... நீ உன் தொகுதியிலேயே டெபாசிட் காலியாகி அலையப் போகிறாய்... ஜெயிக்கவே முடியாது.

ஓ.பி.எஸ், சசிகலா பெங்களூரு புகழேந்திோன்றவர்கள் எல்லாம் மீண்டும் அதிமுகவில் சேர்வதற்கான வாய்ப்பு குறைந்து விட்டதால் அவர்களது அணியினர் எதிர்காலம் என்னவாகுமோ என புலம்பி வருகிறார்கள். ஒவ்வொரு முறையும், பிரச்னை வரும்போது, சிறிது காலம் பொறுத்திருங்கள். நமக்கான காலம் வந்து விடும் என சொல்லி அவருடைய ஆதரவாளர்களை சமாதானப்படுத்தி வந்தார் இனிமேல், அவர்களை கட்டுக்குள் வைத்திருப்பது கடினம்.

இந்நிலையில் முன்னாள் அதிமுக நிர்வாகியும், எடப்பாடி பழனிசாமியின் விரக்தியாளருமான பெங்களூரு புகழேந்தி பெரும் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஒருங்கிணைப்பு குழுவுக்கு எல்லாம் பழனிச்சாமி ஒத்து வருவது போல் இல்லை. அவருடைய கண்டிஷன் எல்லாம் இந்த கட்சியை நான் அடமானம் வைக்கிறேன். இல்லையென்றால் விற்று விடுகிறேன் என்பதுதான். 

இதையும் படிங்க: ஓடிப்போன பெண்ணுடன் கட்டாயக் கல்யாணம்… மீண்டும் ஓடினால்..? அதற்கும் தயாரான பாஜக..! கடும் விமர்சனம்..!

ஓபிஎஸ், சசிகலா ,புகழேந்தி இன்னும் பெயர் சொல்ல விரும்பாத யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது என அதை எல்லாம் சொல்லிவிட்டார். ஆக இதுதான் நிலைமை. நான், ஜேசிடிபிரபாகரன் மற்றவர்கள் எல்லாம் பெரிய அளவில் எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகி விட்டது. நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்று லட்சோப லட்சம் தொண்டர்களும், மக்களும் விரும்பினார்கள். எல்லோரிடமும் நான் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். எவ்வளவு அதிகபட்சமாக முயற்சி எடுக்க வேண்டுமோ முயற்சி எடுத்து விட்டோம். ரோட்டில் செல்பவர்கள் என்று சொன்னதை கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம்.

 

ஆனால், பழனிச்சாமி என்ற ஒரு தீய சக்தியால் அது தடைப்பட்டு போனது. இப்போ நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று கேட்டீங்கன்னா ரொம்ப தெளிவா இருக்கிறோம். வேற வழியில்லை . கொடி எடுக்கும் தொண்டர்களே முடிவெடுப்பார்கள். தமிழக முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்து மாவட்டம் தோறும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். வண்டியெல்லாம் தயாராகிவிட்டது. நாங்களே களத்தில் இறங்கி பிரச்சாரத்திற்கு போகத் தயாராகி விட்டோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து போகிறோம். தொடர்ந்து பல வண்டிகள், பல தலைவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பல பேர் எங்களுடன் வருவார்கள்.

 ஆகவே இந்த பழனிச்சாமி வைத்திருப்பது அதிமுக கூட்டணி இல்லை. வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இது பழனிச்சாமி அணி எடுத்த முடிவு. முறையான முடிவு அல்ல. ஆகையால் மாபெரும் புரட்சி வெடிக்கும். எல்லா இடங்களுக்கும் பிரச்சாரம் போவோம். இந்த கூட்டணியை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். பாஜகவுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. பழனிச்சாமி எடுத்த முடிவு கட்சிக்கு இழைத்த துரோகம். உடனடியாக நாங்கள் இந்த நடவடிக்கையில் இறங்க போகிறோம்.

 அமித்ஷா நான் பார்த்த அரசியல் தலைவர்களில் மிகவும் விவரமானவர். நீங்க நினைப்பது போல் எல்லாம் இல்லை. இன்னும் ஆயிரம் பழனிச்சாமி வந்தாலும் தூக்கி சாப்பிட்டு விடுவார். ஆகையால்தான் பாஜக ஆட்சி மத்தியில் இருக்கிறது. இப்படி பழனிச்சாமி எடுத்த முடிவு தவறாக இருக்கிறது என்று தெரிந்தும், பத்து தேர்தலில் தோற்று விட்டோம் என்று தெரிந்தும், அம்மா சொன்னது போல் ''எந்த காலகட்டத்திலும் பாஜகவுடன் உறவு கிடையாது. எனது வாழ்நாளில் நான் ஒரு தவறை செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கேட்டார் அம்மா. அந்த பாலிசியில் நிற்பதாக சொல்லிவிட்டு ஊரெல்லாம் ஏமாற்றி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

 அமித்ஷா 100 சீட்டு கொடுய்யா என்று கேட்டால் காலில் விழுந்து எடப்பாடி பழனிச்சாமி கொடுத்து விடுவார். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அதிமுகவை சேர்ந்த ஒருவர் நான் தீக்குளித்து விடுவேன் என்றார். இன்னொருவர் செத்துப் போய் விடுவேன் என்றார். எந்த தப்பையும் நீங்கள் செய்து விடாதீர்கள். நல்லபடியாக, ஆரோக்கியமாக இருங்கள். அதையெல்லாம் நாங்கள் விரும்பவில்லை. ஜெயக்குமாரை 10, 12 நாளாக காணவில்லை. கே.பி.முனுசாமியை விடுங்கள்... அந்த ஆள் எல்லாம் திருந்த மாட்டார். அவ்வப்போது மாறி மாறி பேசுவார். 

பாஜக, பாமக கூட்டணியால் தான் தோற்றோம் என்று கூறிய சி.வி.சண்முகத்தை காணவில்லை. ஆகையால் நாங்கள் ஒரு மிகப்பெரிய பொறுப்புக்கு தயாராகி விட்டோம். இந்த போரில் எங்களது பங்கு நிச்சயமாக இருக்கும். தமிழ்நாட்டில் மூலை,  முடிக்கெல்லாம் போகத்தான் போகிறோம். இந்த பழனிச்சாமி நாடகத்தை தோலுரிப்போம். பழனிசாமி... சேலத்தில் இருந்து சொல்கிறேன்... நீ உன் தொகுதியிலேயே டெபாசிட் காலியாகி அலையப் போகிறாய்... ஜெயிக்கவே முடியாது. டெபாசிட் கிடைக்க விடாமல் நாங்கள் செய்யவில்லை என்றால் நடக்குதா? இல்லையா? என்பதை பார். அதை செய்து காட்டுவது எங்களுடைய தலைமையாக இருக்கும்'' என்று சபதம் போட்டுள்ளார் பெங்களூரு புகழேந்தி.

இதையும் படிங்க: ஒரே ஓட்டலில் ஏரெடுத்தும் பார்க்காத அமித் ஷா... இலவுகாத்த கிளியான ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share