திமுக-வின் நாடகத்தை தோலுரித்த 'கள்' நல்லசாமி.. செய்தியாளர் சந்திப்பின்போதே கொத்தாக தூக்கிய போலீஸார்..!
சட்டமன்றத்தில் விவாதிக்க தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் 40 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட இது பற்றி வாய் திறக்கவில்லை.
திடீரென கையில் மனுவுடன் தலைமை செயலகத்திற்குள் நுழைந்த கள் நல்லசாமி செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டையைப்பிடித்து போலீஸார் இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைமை செயலகத்தின் முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கள் நல்லசாமி. அப்போது அவர், ''மேட்டூர் அணை மூன்று முறை முழு கொள்ளளவை எட்டியது. இருந்தபோதிலும் குறிப்பாக குறுவை சாகுபடி சாத்தியமாகவில்லை. இதற்கு என்ன காரணம்? காவிரி தீர்ப்பில் இருக்கக்கூடிய தவறு காரணமா? இல்லை கர்நாடகம் மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டுக்கும், புதுச்சேரிக்கும் உண்டான உரிமை நீரை திறந்து விட தவறியது காரணமா? அடுத்து இந்த தீர்ப்பில் இருக்கக்கூடிய தவறு திருத்தப்பட வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையம் ஒழுங்காற்றுக் குழு செயல்படாமல் போனதா? உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் பாராமுகம் காட்டுகிறதா? இதைப் பற்றி இந்த சட்டப்பேரவை தொடரில் விவாதிக்க வேண்டும். இந்த தீர்ப்பில் இருக்கக்கூடிய தவறுதான் இத்தனைக்கும் காரணம். இந்தத் தீர்ப்பு ஒரு தவறான தீர்ப்பு. இது ஒரு ஏட்டு சுரக்காய். கானல், நீர் மாயமான். காவிரி தீர்ப்பு என்பது இதுவரை இதன் வெளிப்பாடுதான். நடப்பாண்டில் மூன்று முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியும் குருவை சாகுபடி சாத்தியமாகவில்லை.
இதையும் படிங்க: காட்டிக்கொடுத்ததால் ஆத்திரம்.. தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு.. கஞ்சா இளைஞர்கள் வெறிச்செயல்..!
தினந்தோறும் நீர் பங்கீடு ஒன்றுதான் இதற்கு தீர்வு. எதற்காக தமிழ்நாட்டிற்கும், புதுச்சேரிக்கும் உண்டான உரிமை நீரை கர்நாடக நீர்த்தேக்கங்களில் தேக்க வேண்டும். தமிழ்நாடு அரசும், புதுவை அரசும் பணம் கொடுத்ததா? தேக்கி வைப்பதற்கு வாடகை கொடுக்கின்றோமா? எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் அங்கே தண்ணீரை தேக்கிக் கொள்கிறார்கள்? நீர் பங்கீட்டு தீர்ப்பின் விகிதாச்சாரப்படி கர்நாடகாவுக்கு 284.75 டிஎம்சி, தமிழ்நாட்டுக்கும், புதுச்சேரிக்கும் 177.15 டிஎம்சி, கேரளாவுக்கு 21 டிஎம்சி. இந்த விகிதாச்சார அடிப்படையில் தினந்தோறும் பங்கிட்டு அந்த தண்ணீரை தமிழ்நாட்டுக்கும், புதுவைக்கும் கொடுத்து விட வேண்டும்.
ஒரு செட்டு நீர்கூட கர்நாடக நீர் தேக்கங்களில் தமிழ்நாட்டுக்கு உண்டான உரிமை நீர் சேர்க்கக்கூடாது. இதற்காக தமிழ்நாடு அரசு உடனடியாக ஒரு மறுசீராய்வு மனுவை காவிரி நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஏற்றுக்கொண்டால் வரவேற்போம். ஏற்றுக்கொள்ளாவிட்டால் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும். அங்கும் தீர்வு கிடைக்க விட்டால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்.
ஆக, இந்த சட்ட பிரிவில் அது தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். எதை எதையோ பேசுகிறார்கள். உதாரணத்திற்கு யார் அந்த சார்? யார் அந்த சார்..? என முன்னிலைப்படுத்துகிறார்கள். இந்த நிகழ்வு ஒருவருக்கு கிராமத்திலும் நடக்கிறது. அங்கங்கே காவல் நிலையங்கள் இருக்கிறது. நீதிமன்றங்கள் இருக்கிறது. அது அவர்களது வேலை. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கொள்கை முடிவு எடுக்கக்கூடிய இடத்தில் தேவையில்லாததை விவாதிக்கிறீர்கள்.
முக்கியமான உயிர்நாடியாக இருக்கக்கூடிய காவிரியில் நடப்பாண்டில் குருவை சாகுபடி செய்யும் சாத்தியம் இல்லை. இதைப்பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் 40 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட இது பற்றி வாய் திறக்கவில்லை. இந்த போக்கை நாங்கள் கண்டிக்கிறோம். விவாதிக்க வேண்டும், ஒரு நல்ல தீர்வு எட்ட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை'' என அவர் பேசிக் கொண்டு இருக்கும்போதே பின்னால் நின்றிருந்த போலீஸார், கள் நல்லசாமியின் சட்டையைப் பிடித்து இழுத்து அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேசனில் பெண் போலீசிடம் அத்துமீறல்.. ஆபாச படத்தை போட்டு காமித்து போதையில் சப்-இன்ஸ் அராஜகம்..!