×
 

திமுக வைத்த துரோக கூட்டணிகள்… குல்லுகபட்டர் முதல் லீலாவதி போட்டோ வரை..!

ஜெயின் கமிஷன் பெயரை சொல்லி, மத்திய ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது காங்கிரஸ். அதே திமுகவுடன் 2004-ல் கூட்டணி.  2011-ல் மீண்டும் முறிந்தது.

அதிமுக- பாஜக கூட்டணியை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்துக்கு அதிமுக துரோகம் செய்து விட்டதாக கூறிவருகின்றனர். வைகோ, கனிமொழி, திருமாவளவன் போன்றவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இதனால் கடுப்பான அதிமுக நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுவரை திமுக வைத்திருந்த பொருந்தா கூட்டணியை பட்டியல் போட்டு வருகின்றன. குல்லுகபட்டர் என சொல்லிய திமுக 1967இல் ராஜாஜியோடு கூட்டு. திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார் எமெர்ஜென்சியில் இந்திரா காந்தி. ஸ்டாலின் உட்பட பலரை சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தினார். ஆனால் இரு கட்சிகளும் 2 ஆண்டுகளில் கூட்டணி அமைத்தன.

ராஜீவ் படுகொலைக்கு பிறகு, 1996-ல் மூப்பனார் திமுகவுடன் கூட்டணி அமைத்தார். ஜெயின் கமிஷன் பெயரை சொல்லி, மத்திய ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது காங்கிரஸ். அதே திமுகவுடன் 2004-ல் கூட்டணி.  2011-ல் மீண்டும் முறிந்தது. கூடா நட்பு என்றெல்லாம் பேசிவிட்டு 2016-ல் மீண்டும் கூட்டணி

இதையும் படிங்க: தலையாட்டி பொம்மை யோக்கியதை.. முதல்வர் சொன்னா கோபம் வருதோ.? இபிஎஸ்-ஐ கதறவிடும் அமைச்சர் ரகுபதி!

5 பேர் தீக்குளிப்பில் உருவான மதிமுக, இன்று அதே திமுகவில் ஐக்கியம். இடையில் ஜெயலலிதாவால் சிறைப்படுத்தப்பட்ட பிறகும், அவருடன் கூட்டணி. 2016-ல் திமுக மற்றும் காங்கிரஸ் பற்றி வைகோ பேசாத அவதூறு இல்லை. பாஜக ஆட்சியில் இருந்த வைகோ பாஜகவை மீது திமுக ஆதரவுவோடு எதிர்த்து வருகிறார்.

பாஜகவை காவி, பண்டாரங்கள், பரதேசிகள் தமிழ்நாட்டில் இடம் இல்லை என சொன்ன திமுக 1999 அதே பாஜகவோடு கூட்டணியை அமைத்தது மத்திய ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பெற்றது. மதுரை லீலாவதியை கொன்றது யாரென்று எல்லோருக்கும் தெரியும். அதே லீலாவதி படத்தை போட்டு, திமுக கூட்டணிக்கு ஓட்டு கேட்கிறது கம்யூனிஸ்ட். 

அந்த வரிசையில் நாடாளுமன்ற தேர்தலுக்குமுன் பிரிந்தவர்கள் இப்போது இணைந்துள்ளார்கள். அதிமுக - பாஜக கூட்டணி. அதிமுக தனியாக தனியாக போட்டியிடும், தேசிய ஜனநாயக கூட்டணி தனியாக போட்டியிடும், விஜய் தனியாக போட்டியிடுவார் சீமான் தனியாக போட்டியிடுவார் நான் மட்டும் கூட்டணியாக நின்று எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்தார்கள் இந்த ஒட்டுண்ணி கோஷ்டிகள்'' என பட்டியல் போட்டு விமர்சிக்கின்றனர். 
 

இதையும் படிங்க: பாஜகவை எதிர்த்தால் என்னவாகும் தெரியுமா..? திமுக அமைச்சர்கள் -எம்.பி-க்களின் பரிதாப நிலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share