×
 

இலவசங்கள் தர பணம் இருக்கு!!! நீதிபதிகளுக்கு பணமில்லையா?? உச்ச நீதிமன்றம் விளாசல்

வேலைக்கே செல்லாத, வேலையே இல்லாத மக்களுக்கு தேர்தல் நேரத்தில் இலவசங்களை வழங்க அரசிடம் பணம் இருக்கிறது, ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்க பணம் இல்லையா என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.

மாவட்ட நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு உரிய ஓய்வூதியப் பலன்களை மத்திய அரசு வழங்கவில்லை. 
இது தொடர்பாக அனைத்து இந்திய நீதிபதிகள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2015ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. விரைவில் தங்களுக்குரிய ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் காவே, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கட்ரமணி ஆஜராகினார். 
அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி தாக்கல் செய்த மனுவில் “ ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம், ஓய்வூதியப் பலன்கள், ஊதியம்  வழங்கும்போது, அரசு நிதி ஆதாரங்கள் நிலவரத்தையும் பார்ப்பது அவசியம், அரசுக்கும் நிதிச்சிக்கல் இருக்கிறது. அரசின் உண்மையான நிலையை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.


அதற்கு நீதிபதிகள் பிஆர் காவே, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி குறிப்பிடுகையில் “ எந்த வேலைக்கும் செல்லாத, வேலையே செய்யாத மக்களுக்கு இலவசங்கள் என்ற பெயரில் பணத்தை வழங்க மாநில அரசுகளிடம் பணம் இருக்கிறது. தேர்தல் என வந்துவிட்டால் “லடில் பேரா” உள்ளிட்ட பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து பெண்களுக்கு இலவசமாக மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் பணம் வழங்க அரசிடம் பணம் இருக்கிறது. ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும், ஓய்வூதியப் பலன்களை வழங்கவும், ஊதியம் வழங்கவும் மட்டும் அரசிடம் பணம் இல்லை. 

இதையும் படிங்க: வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆப்பு ...!தான பத்திரத்தை ரத்து செய்ய" அதிரடி உத்தரவு


டெல்லியில் தேர்தல் நேர்தல் சில கட்சிகள் தங்களின் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2100 முதல் ரூ.2500 வரை வழங்குவதாக அறிவிப்பு செய்துள்ளன.
 நாங்கள் அரசுக்கு நிதி நெருக்கடி இருப்பதை கருத வேண்டும் என்று நீங்கள் கூறினால், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் செய்துள்ள அறிவிப்புகள், இலவசத் திட்டங்கள், நடைமுறைப்படுத்தப்பட்ட இலவசத் திட்டங்களையும் நாங்கள் கணக்கில் எடுக்க வேண்டியதிருக்கும்” எனக் காட்டமாகத் தெரிவித்தனர். முன்னதாக உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் நிலைமை மோசமாக இருக்கிறது என்று  கவலை தெரிவித்திருந்தது. அதாவது, சில ஓய்வு பெற்ற மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாதம் ரூ.10ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் மட்டுமே ஓய்வூதியம் பெறுகிறார்கள். அது கூட சில நேரங்களில் முறையாகக் கிடைப்பதில்லை” என்று வேதனை தெரிவித்திருந்தது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, கடந்த டிசம்பர் 12ம் தேதி மகிளா சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.2100 வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியோ தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.2500 வழங்குவோம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப்பதிவு: சிபிஐ-க்கு மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை; உச்சநீதிமன்றம் அதிரடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share