×
 

திமுகவை நம்பி விசிக இல்ல..! மெல்ல மெல்ல காய் நகர்த்துராங்க.. உடைத்து பேசிய திருமா..!

திமுகவை மட்டுமே நம்பி விசிக உள்ளது போன்று தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொண்டர்களுக்கான முகநூல் நேரலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது, திமுகவை நம்பி மட்டுமே விசிக இல்லை என்றும் தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விடுதலை சிறுத்தை கட்சியால் எடுக்க முடியும் என்றும் கூறினார். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாம் கருத்துக்களை சொல்வதால் நமக்கு எதிராக அவதூறுகளை பரப்புகிறார்கள் என்றும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு துணிவு, தெளிவு, தொலைநோக்கு பார்வை வேண்டும் எனவும் தெரிவித்தார். அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தை மெல்ல மெல்ல காய் நகர்த்தி நீர்த்துப் போக செய்கிறார்கள் என்றும் திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு விசிக தான் எனவும் கூறினார்.

கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தன்னை விழாக்களில் கலந்து கொள்ள வைப்பது மன அழுத்தத்தை தருகிறது என  வருத்தம் தெரிவித்தார். மேலும், ஒரு நாள் கூட தனக்கு ஓய்வு இல்லை, ஒரு மணி நேரம் கூட எனக்கு தனிமை இல்லை, நாள் கணக்கில், மணிக்கணக்கில் கிடையாய் கிடந்து அழுத்தம் கொடுத்து இழுத்துச் சொல்வதால் கட்சிப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என திருமாவளவன் கூறினார்.

இதையும் படிங்க: வன்னியர் சங்க மாநாட்டிற்கு திருமாவுக்கு நேரில் அழைப்பு.. ராமதாஸ் போடும் அரசியல் கணக்கு - பின்னணி என்ன?

இதையும் படிங்க: பாமக சித்திரை முழு நிலவு மாநாடு..! திருமாவளவனுக்கு அழைப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share