×
 

டெல்லியில் பாஜக மாபெரும் எழுச்சி..! இந்தியா கூட்டணி மீது திருமாவளவன் அதிர்ச்சி..!

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.


 அப்போது பேசிய அவர், டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது..ஆம் ஆத்மி பின்னடைவு ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமானால் அது தேசத்திற்கான தேர்தல் பின்னடைவு என கருத வேண்டி இருக்கிறது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். ஈகோ பிரச்சனைகளை பின்பக்கத்தில் வைத்து நாட்டினையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும்.இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது எனக்கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: தர்காவில் பலியிடுவது வழக்கம்... திருப்பரங்குன்றம் சர்ச்சை பின்னணியை புட்டு,புட்டு வைத்த திருமா!

டெல்லி தேர்தல் முடிவுகளை படிப்பினையாக கொண்டு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திரிணாமுல், ஆம் ஆத்மி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்திய திருமா, இந்தியா கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து செயல்படாமல் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து செயல்பட வேண்டும் என்றார். ஈரோடு சட்டமன்ற இடைக் தேர்தல் எதிர்பார்த்த வெற்றியை திமுக பெரும் என்று நம்புகிறேன் எனக்கூறினார். 

இதையும் படிங்க: “திமுக கொத்தடிமை திருமாவுக்கு எங்களப் பத்தி பேச என்ன அருகதை இருக்கு”... கொந்தளித்த ஜெயக்குமார்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share