×
 

படுத்துவிட்டு துடைத்துவா..? திருமாவின் பேச்சு… ரிவெஞ்ச் எடுக்கத் தயாராகும் ஹெச்.ராசா..!

மூன்று ஜாதி பெயரை சொல்லி எங்களிடம் வந்து படுக்கிறார்கள். பத்து மாதம் படுத்து இருந்தாலும் துடைத்துவிட்டு வா என்று சொல்வது அந்த சமுதாயம் என்று திருமாவளவன் பேசியிருக்கிறாரா? இல்லையா?

அதிமுக - பாஜக கூட்டணியை விமர்சித்த திருமாவளவனை சரமாரியாக சாடியுள்ளார் ஹெச்.ராஜா 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பி.எஸ்., டிடிவி. தினகரன் நிலைமை குறித்து,''நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவர்கள் கட்சியை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். பாஜக நிர்வாகிகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அதிமுகவின் செயல்பாட்டை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆகையால் எங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வந்த பிறகு நாங்கள் இடையில் கருத்து சொல்வதற்கு என்ன இருக்கிறது? எதுவாக இருந்தாலும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். உங்கள் மூலமாக சொல்ல வேண்டிய அவசியம் பாரதிய ஜனதா கட்சிக்கும் இல்லை, அதிமுகவுக்குமில்லை.

அடுத்த தலைமுறை காப்பாற்ற வேண்டும் என்பதில் மக்கள் என்று தெளிவாக இருக்கிறார்கள். என் பேரக் குழந்தை, என்னுடைய குழந்தை போதைக்கு ஆளாகமல் காப்பாற்றப்பட வேண்டும். இந்த ஊழல், போதை, தீய ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஆகையால் மக்கள் தெளிவாக செய்வார்கள்.  ஓபிஎஸ் தன்னை கூட்டணியில் சேர்ப்பது குறித்து ஹெச். ராஜாவிடம் கேள்வி கேளுங்கள் என்று சொல்லி இருக்கிறாரா?  ஆகையால், இதை நீங்கள் எங்களிடம் கேட்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் தலைமை முடிவு செய்யும்.

இதையும் படிங்க: பாஜக தயவுக்காக மக்களிடமிருந்து விலகி நிற்கும் அதிமுக.. அதிமுகவை எகிறி அடிக்கும் திருமாவளவன்

நான் 35 ஆண்டுகளாக பாஜக கட்சியின் நிர்வாகியாக இருப்பவன். தமிழ்நாட்டிலேயே 35 ஆண்டு காலம் பாஜக நிர்வாகியாக இருக்கும் ஒரே நபர், முதல் நபர் நான்தான். ஆனால் இந்த 35 ஆண்டுகளில் கூட்டணி பற்றியோ, ஆட்சியில் பங்கு பற்றியோ மாநில கட்சி பேசியது இல்லை. எங்களுக்கு இந்த முடிவுகள், கூட்டணி, தொகுதி, எது நமக்கு, எது கூட்டணிக்கு, யார் வேட்பாளர் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் 16 மூத்த தலைவர்கள் இருக்கின்ற நாடாளுமன்ற கூட்டுக் குழுதான் முடிவு செய்யும். ஆகையால் அதைப் பற்றிய கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க முடியாது.

 திருமாவளவன் யார் மீது சவாரி செய்கிறார்? நான் இந்த தீய சக்தி திருமாவளவன் பற்றி பேசுவதாக இல்லை. நீங்கள் கேட்டதனால் சொல்கிறேன். அவரோட சரக்கு மிடுக்கு பேச்சை ஒவ்வொரு வீட்டிற்கும் போட்டு காட்டுவோம். அனைத்து சமுதாய பெண்களும் அலைகிறார்கள் என்று பேசிய அறுவருக்கத்தக்க தீய சக்தி திருமாவளவன். அந்த சரக்கு மிடுக்கு பேச்சை யாராவது இங்கு இருப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? உங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா? பிற சாதி ஆண்கள் எல்லாம் ஆண்மை இல்லாதவர்கள். செருப்பு போட்டுக் கொள்வான், டை கட்டிக் கொள்வான், ஆனால் அவனிடம் சரக்கு இல்லை என்கிறார்.  ஆகையால் உங்கள் பெண் குழந்தை எல்லாம் அலைகிறது. மூன்று ஜாதி பெயரை சொல்லி எங்களிடம் வந்து படுக்கிறார்கள். பத்து மாதம் படுத்து இருந்தாலும் துடைத்துவிட்டு வா என்று சொல்வது அந்த சமுதாயம் என்று திருமாவளவன் பேசியிருக்கிறாரா? இல்லையா?

அந்த மாதிரி தீய சக்தி பேசியதை நீங்கள் என்னிடம் கேட்கலாமா ? ஆகையால் அதை வேண்டாம் என்கிறேன். நான் உண்மையை பேசினால் ரொம்ப மோசமாக இருக்கும். அறுவருக்கத்தக்க வகையில் இருக்கும். திருமாவளவனை போல ஒரு தீய சக்தி இந்த உலகத்திலேயே இல்லை. ஆகையால் அவரைப் பற்றி பேச வேண்டாம்'' எனக் கொந்தளித்தார் ஹெச்.ராஜா.

இதையும் படிங்க: குமரி அனந்தன் உடலுக்கு ஆளுநர் ரவி நேரில் அஞ்சலி.. திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share