திருப்பம் ஏற்படாத திருப்பரங்குன்றம்…! கலெக்டர் மீது பழி போடும் திமுக கூட்டணி… அதிமுகவை கைகாட்டும் சங்கீதா..!
அதிமுக பிரதிநிதி கையெழுத்து போடாமல் சென்றதாக ஆட்சியை சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை பின்னணியில் ஆளுங்க கட்சியின் அழுத்தம் இருக்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளது அதிமுக.
திருப்பரங்குன்றம் மலையை வைத்து இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் அசாதாரண சூழலுக்கு மாவட்ட ஆட்சியர் அறிக்கை முடிவாக இருக்கும் என்று பார்த்தால் அரசியல் ரீதியாக இன்னும் பிரச்சினையை ஊதி பெரிதாக்குவதாக இருக்கிறது.
இந்துக்கள், இஸ்லாமியர்கள் என இரு மதத்தினரும் இத்தனை ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் வழிபாடு நடத்தி வந்த திருப்பரங்குன்றம் மலையை வைத்து தற்போது இயல்புக்கு மாறாக சூழல் நிலவி வருகிறது. இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்தது தொடர்ந்து நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி போராடி போராட்டத்தை நடத்தி முடித்தது வரை ஒரு வாரமாக திருப்பரங்குன்றம் விகாரம் தீப்பிடித்து எரிந்து வருகிறது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு விளக்கம் கொடுத்து மதுரை ஆட்சியர் சங்கீதாவின் பெயரில் புதன்கிழமை அன்று அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில் கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி தொடங்கி திருப்பரங்குன்றம் மலையை வைத்து என்னென்ன நடந்தது என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மற்றொரு கோவை ஆகிறதா மதுரை? வணிக கோணத்தில் திருப்பரங்குன்றம் மறியல்...
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியர் அமைதி பேச்சு வார்த்தையில் இருமதத்தினரும் ஏற்கனவே இருக்கும் வழிபாட்டு முறைகளை பின்பற்றுவதும் கோழி, ஆடு பலியிடுவது தொடர்பாக நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவை இஸ்லாமிய அமைப்புகள் ஏற்காமல் கந்தூரி நடத்துவதாக அறிவிக்க, பதிலுக்கு இந்து அமைப்புகள் போர் கொடி தூக்க முயல பரபரப்பான சூழல் நிலவ மீண்டும் ஜனவரி 30 ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் ஏற்கனவே இருக்கும் வழிபாட்டு உரிமைகளை தொடர்வது என்பதோடு ஆடு, கோழிகள் பலியிடலாம் என்று முடிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா, இந்த ஒப்பந்தத்தை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்ட நிலையில் அதிமுக பிரதிநிதி மட்டும் ஏற்க மறுத்தது கையெழுத்து போட மறுத்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுக தான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவின் அறிவிப்புக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து இருக்கிறது அதிமுக. அதாவது அமைதி பேச்சு வார்த்தையில் அதிமுகவினரை ஆட்சியர் அழைக்கவே இல்லை எனவும், பிறகு எப்படி கையெழுத்து போடாமல் வெளியேறியிருக்க முடியும் என்றும் அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவே இல்லாமல் அதிமுக பிரதிநிதி கையெழுத்து போடாமல் சென்றதாக ஆட்சியை சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை பின்னணியில் ஆளுங்க கட்சியின் அழுத்தம் இருக்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளது அதிமுக.
தங்களைப் பற்றி அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்களை நீக்க வேண்டும் என ஆட்சியரை சந்தித்து நேரடியாக மனு கொடுத்து பதிலடி கொடுத்துள்ளனர்.இரு மதத்தினரிடையே எழுந்துள்ள அசாதாரண சூழலுக்கு அதிமுக மீது குறை கூறி ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை பிரச்னையாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெளியான அறிக்கை ஆட்சியர் பெயரை குறிப்பிட்டு சென்னையிலிருந்து வெளியாகி இருக்கிறது என்று கூறும் அதிமுக, தங்கள் மீது வீண்பழி சுமத்த வேண்டும் என்பதற்காக இந்த அறிக்கை வெளியிட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த அறிக்கை உளவுத்துறையினரும், டிஐபிஆரும் வெளியிட்டு இருக்கிறார்கள் என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. மதரீதியான பிரச்சனைக்கு யாராக இருந்தாலும் சுமூகத் தீர்வை நோக்கி தான் நகர வேண்டுமே தவிர, மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்வது இன்னும் பிரச்சினையை பெரிதாக்கும். தேவையில்லாத குழப்பத்தை தான் உருவாக்கும் என்கிற பார்வையே முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'பாஜகவை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதா திமுக அரசு..?' கொதிக்கும் சீமான்..!