சாட்டையால் தாக்கப்பட்ட அந்த 2 வீடியோ… 'அண்ணாச்சிக்காக' தம்பி மீது கடுப்பான அண்ணன் சீமான்..!
அந்த வீடியோக்களில் வைகுண்டராஜனின் தாதுமணற் கொள்ளை வரலாற்றை விலாவரியாகப் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் விலகக் கூடும் என தெரிகிறது. சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் நாதக கொள்கை பரப்புச் செயலாளர் என பதிவிட்டிருந்ததை திடீரென நீக்கி இருப்பதைத் தொடர்ந்து அக்கட்சியைவிட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
''சாட்டை துரைமுருகன் நடத்தும் யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதில் இடம் பெறும் கருத்துகளுக்கு நாம் தமிழர் கட்சி பொறுப்பேற்காது'' என அறிவித்திருந்தார் சீமான்
.
சீமான் இந்த அறிக்கையை வெளியிட காரணம், சாட்டை துரைமுருகன் 9 நாளுக்கு முன்பு யூடியூப்பில் பதிவேற்றிய இரண்டு வீடியோவுக்காகத்தான் எனக் கூறப்படுகிறது. அந்த வீடியோக்களில் வைகுண்டராஜனின் தாதுமணற் கொள்ளை வரலாற்றை விலாவரியாகப் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: சாட்டையை தூக்கி எறிந்த சீமான்.. நாதக-வில் இருந்து துரைமுருகன் விலகல்..?
சசிகலா ஆதரவுடன் தாதுமணற்கொள்ளை வளர்ந்த விதம், சசிகலா துரத்தப்பட்டபோது ஜெயலலிதா நேரடியாக வைகுண்டராஜனை டீல் செய்ததில் வந்த சண்டை. அதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட தடை. தடைக்காலத்திலும் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்ட விதம் என அனைத்தையும் சந்திக்கு இழுத்துவிட்டிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் கூட வைகுண்டராஜன் நிறுவனங்களிடம் இருந்து ₹5,832 கோடி வசூலிக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வீடியோக்களால்தான் சீமான் கடுப்பாகி துரைமுருகனுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
சாட்டை மூலம் துரைமுருகன் என்னென்ன சிக்கல்களுக்கு ஆளாகி இருக்கிறார் தெரியுமா? மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட திமுக தலைவர்களை கடுமையாக விமர்சிக்கும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். உதாரணமாக, "திருடர் கழகத்தின் 3-வது புலிகேசி" என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலினை கேலி செய்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
2021ல், செந்தில்பாலாஜி மணல் கடத்தலில் தொடர்புடையவர் என குற்றம்சாட்டி வெளியிட்ட வீடியோவால் கரூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர், ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களுடன் டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டதால் காங்கிரஸ் கட்சியினரின் புகாருக்கு உள்ளானார்.
2021ல், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து இழிவாகப் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு, திருச்சியில் வாகன பழுது நீக்கும் மைய உரிமையாளரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் உணவு விஷத்தால் உயிரிழந்ததாக தவறான தகவல் பரப்பிய வீடியோவால் 2021 டிசம்பரில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
2025 பிப்ரவரியில், நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவை கடுமையாக விமர்சித்து "விஜய் அரசியலை ஒழித்து கட்டாமல் விடமாட்டோம்" என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டார். 2025 ஏப்ரலில், அமைச்சர் பொன்முடியை விமர்சித்து "பொன்முடியை வெளுத்து வாங்கிய துரைமுருகன்" என்ற தலைப்பில் வீடியோ பதிவேற்றப்பட்டது.
2025 ஏப்ரல் 9 அன்று, திருச்சி விமான நிலையத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக ஒரு வீடியோவை சாட்டை துரைமுருகனின் அதிகாரப்பூர்வ எக்ஸ்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
2021 ஜூனில் மிரட்டல் மற்றும் அவதூறு வழக்கில் திருச்சியில் கைது செய்யப்பட்டார். 2021 அக்டோபரில், மு.க.ஸ்டாலின் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பு குறித்து அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்டார். 2021 டிசம்பரில் ஃபாக்ஸ்கான் விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டார்.
2022 ஜனவரியில் ஃபாக்ஸ்கான் வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 2024 ஜூலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாகப் பேசியதாக குற்றாலத்தில் கைது செய்யப்பட்டார்.
2024 ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் நீட்டித்தது. ஆனால் அவதூறு பேசக் கூடாது என்ற நிபந்தனையை மீறியதாக மீண்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சாட்டை துரைமுருகன் முன்பு நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி நிர்வாகியாக இருந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் நாதகவில் இணைந்தார். சாட்டை துரைமுருகனின் வீடியோக்கள் பல சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. சட்டரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளன.
இதையும் படிங்க: நித்யாவை பெருமைப்படுத்தி.. இ.பி.எஸை இழிவாக்கி.. கடுப்பில் 'சாட்டை'யை தூக்கி எறிந்த சீமான்..!