சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர்.. 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை.. தொடரும் துப்பாக்கிச் சண்டை..!
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட்கள் கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தாண்டேவாடா- பிஜப்பூர் எல்லையில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிர்நாடூல் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக துணை ராணுவப்படையினருக்கும், மாவட்ட ரிசர்வ் போலீஸாருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த வனப்பகுதியை போலீஸாரும், துணை ராணுவப்படையினரும் சுற்றி வளைத்தனர்.
அப்போது துணை ராணுவப்படையினர,போலீஸார் மீது மாவோயிஸ்ட்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் பாதுகாப்புக்காக போலீஸாரும்,துணை ராணுவப்படையினருக்கும் திருப்பிச் சுட்டனர். இதில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு.. 2026 மார்ச் 31 தான் கடைசி.. நக்சலைட் இல்லாத நாடாக இந்தியா மாறும்.. அமித்ஷா சூளுரை..!
இந்த தகவலை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கவுரவ் ராய் உறுதி செய்தார். அவர் கூறுகையில் “ மாவோயிஸ்ட்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிபொருட்கள், நாட்டு வெடிகள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்னும் பல மாவோயிஸ்ட்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, தேடுதல் வேட்டை தொடர்கிறது. இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் தரப்பில் யாருக்கும் காயம் இல்லை, பஸ்தர் மண்டலத்தில் மாவோயி்ஸ்ட்கள் வாழும் வலிமையான பகுதி” என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு தவிர்த்து சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 116 மாவோயிஸ்ட்கள் துணை ராணுவப் படையினர் பல்வேறு என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டனர். கடந்த 20ம் தேதி காங்கேர் மாவட்டம், பிஜப்பூரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 30 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர், ஒரு சிஆர்பிஎப் வீரர் கொல்லப்பட்டார்.
2026ம் ஆண்டுக்குள் நாட்டில் மாவோயிஸ்ட்கள் இருக்கமாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாவோயிஸ்ட்களை தேடி அழிக்கும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியை திணிப்பதே திமுக தான்... அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!!