×
 

முதலமைச்சர் ஆகிட்டதா நினைப்பா? - எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த துக்ளக் ரமேஷ்!

அ.தி.மு.க. தலைமையில் தான் ஆட்சி என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ள கருத்துக்கு அரசியல் விமர்சகர் துக்ளக் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறிய விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. இதற்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் பதில் அளித்த வருகிறார்கள். இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. அ.தி.மு.க. தலைமையில் தான் ஆட்சி என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் துக்ளக் ரமேஷ், தமிழ்நாட்டு வாக்காளர்கள் வருகிற தேர்தலில் அளிக்கிற தீர்ப்பை பொறுத்துதான் எந்த ஒரு கட்சிக்கும்  மெஜாரிட்டியா அல்லது சில கட்சிகளின் தயவில் ஆட்சி அமையுமா என்ற முடிவு எடுக்கப்படும். நாங்கள்தான் ஆட்சி அமைக்கிறோம் என இவர்கள் இப்போதே வாயால் வடை சுடுகிறார்கள்.  தற்போது அமைந்துள்ள அதிமுக- பாஜக கூட்டணியால் மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்தி விட முடியாது. இன்னும் சில கட்சிகள் சேர வேண்டும். அதற்கு எந்தெந்த கட்சிகள், என்னென்ன எதிர்பார்ப்புகளுடன் வருகிறார்கள் என்பதைப் பொறுத்து பிரச்சனைகள் வெடிக்கும்.  

இதையும் படிங்க: இதுக்குத் தான் பதவி விலகுறாரா அண்ணாமலை? - ரகசியத்தை உடைத்த துக்ளக் ரமேஷ்...! 

சில கட்சிகளில் இப்போதே பிரச்சனைகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.  பாட்டாளி மக்கள் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருக்கிறது. அந்த பிளவு மிக விரைவில் சரி செய்யப்பட வேண்டும். அதேபோல ஓபிஎஸ், டிடிவி இந்த அணியில் இருப்பார்களா? இல்லையா? என்பதில் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இப்போதே முதலமைச்சர் ஆகிவிட்டதை போல அவர் ஒரு பக்கம் கற்பனையில் இருப்பதும், அவருடைய துதிவாரிகள் நாங்கள் தனித்து தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்லுவதும் எதார்த்த நிலைக்கு பொருந்தாத பேச்சு. ஆகவே இப்போது பல்வேறு கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இடம்பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறது. இப்போது ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சியில் அமர வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியாக இருந்தாலும் சரி பாஜக பாமக போன்ற கட்சிகளாக இருந்தாலும் சரி.. 2026 இல் அமைச்சரவையில் இடம் பெறுவோம் என்பதை திரும்பத் திரும்ப கூறி வருகின்றன. ஆகவே அந்த கட்சியினர் கூட்டணி ஆட்சிக்கு வலியுறுத்துவார்கள். அந்த கட்சியினர் தயவுடன் ஆட்சியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அப்போது கொடுத்து தான் ஆக வேண்டும். ஆகவே தேர்தல் முடிவுக்கு பிறகு பேச வேண்டிய பேச்சை ஏதோ ஆட்சிக்கு வந்துவிட்டது பேசுவது ஏற்புடையதல்ல என கடுமையாக விமர்சித்தார். 

இதையும் படிங்க: அமித் ஷா கொடுத்த அசைன்மெண்ட்; விஜய், சீமானுக்கு பறந்த தூது.. எடப்பாடிக்கு இப்படியொரு நிலைமையா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share