ஆசை ஆசையாய் இருட்டுக்கடை அல்வாவை ருசி பார்த்த முதல்வர்... வாயில் போட்ட மறுகணமே கேட்ட அந்த கேள்வி...!
நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வாவை சுவைத்து மனம் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வாவை சுவைத்து மனம் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நெல்லையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை நெல்லை வருகை புரிந்த தமிழக முதல்வர் சிப்காட்டில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள டாடா சோலார் பணியை தொடங்கி வைத்தும் அதனைத் தொடர்ந்து விக்ரம் சோலார் மின் உற்பத்தி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டியும் மேலும் 1600 கோடியில் பல்வேறு நல திட்ட பணிகளை தொடங்கி வைத்து விட்டு மதியம் ஓய்வெடுக்க சென்றார்.
இதையும் படிங்க: கட்சி தொடங்கியதுமே ஆட்சியைப் பிடிப்போம்... முதல்வராவோம் என்பதா..? விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்த முதல்வர்.!
பின்னர் நெல்லை மக்களை ரோடோரும் சந்தித்தும் கைகளைக் குலுக்கி குழந்தைகள் தூக்கி குஞ்சியும் இளைஞர்களிடம் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வந்தார். அப்போது நெல்லைக்கு புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா கடை அருகே சென்று அங்கு உள்ள ஊழியர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பாரம்பரியம் மிக்க இருட்டுக்கடை அல்வாவை சாப்பிட்டு மனம் மகிழ்ந்தார். அப்போது ஊழியரிடம் அல்வா செய்வது மற்றும் அல்வாவின் பாரம்பரியத்தையும் கேட்டு அறிந்தார். கடைசியாக தான் சாப்பிட்ட அல்வாவிற்கு பணத்தையும் கொடுத்து விட்டு அங்கிருந்து மனமகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றார்.
நம் இருட்டுக்கடை அல்வா கடைக்கு பெருமையான தருணம் இது! 😇❤️🙏🏼
— Iruttukadai Halwa Shop Tirunelveli (@Iruttukadaialwa) February 7, 2025
நம் தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் ஐயா அவர்கள் மாநில அமைச்சர்களுடன் எங்களது கடைக்கு விஜயம் செய்தார். அவர் எங்கள் 124 ஆண்டுகள் பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை சுவைத்துப் பாராட்டி, இதயப்பூர்வமாக… pic.twitter.com/cKXpvu28Jq
இதையும் படிங்க: முதல் ஆளாக அரிட்டாபட்டி விரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின்; நாளை பயணம்!