×
 

காலில் செருப்பை போடாத அண்ணாமலை..! எகிறும் அரசியல் வேல்யூ..!

பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் உடனடியாக கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சினிமாவில் ஹீரோ ரஜினிகாந்த் வில்லன்களைப் பார்த்து ஒரு சவால் விடுவார், தான் சொன்ன காரியத்தை செய்து முடித்த பிறகு தான் இதை தொடுவேன் என சத்தியமும் செய்வார். அதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழகத்தில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை தனது காலில் செருப்பு அணிய போவதில்லை என சபதம் எடுத்துள்ளார்.

அந்த சபதத்தை மெயின்டெயின் செய்யும் வகையில் தொடர்ந்து, எங்கு பார்த்தாலும் அவர் வெறும் காலோடு தான் நடந்து வருகிறார்.

இதையும் படிங்க: சீட்டு விளையாடி வாழ்க்கையை அழிச்சுக்காதீங்க.. சீட்டு ஆட்டத்தில் லட்ச ரூபாய் இழந்தவர் தற்கொலை முயற்சி..!

இன்று திருப்பூர் பகுதியில் நடைபெற்ற கள் இயக்க பொதுக்கூட்டத்திற்கு அண்ணாமலை வெறும் காலோடு வந்தார். அங்கு வந்த டிடிவி தினகரன் ஆகியோரை அண்ணாமலை வரவேற்றார்.

கள் இயக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் உடனடியாக கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் இணைந்து நடத்திய கள் விடுதலை கருத்தரங்கில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோருடன் கலந்து கொண்டு விழாவில் பேசியது மகிழ்ச்சி, பல ஆண்டுகளாக கள் குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி கள்ளுக்கான தடையை நீக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வரும் திரு. நல்லச்சாமி இந்த கருத்தரங்கை சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தது பெருமைக்குரிய விஷயம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களில் மக்கள் தொகை 5.8 கோடி இன்று தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சம் என ஆய்வறிக்கை கூறுகிறது. தமிழகத்தில் தனியார் மதுக்கடைகள் இருந்தபோது கூட இத்தனை பேர் மதுவுக்கு அடிமையாகவில்லை என்றும் அரசாங்கமே மது விற்பனை செய்கிறது, மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் உடல் நலக்குறைவு வேலை வாய்ப்பு இழப்பு என இதனால் தமிழகத்தில் ஏற்படும் உற்பத்தி திறன் இழப்பு ஆண்டுக்கு 87 ஆயிரம் கோடியாக உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையால் பொதுமக்களுக்கு இழப்பை தவிர சாராய அலைகள் நடத்துபவர்களுக்கு மட்டும்தான் இதில் லாபம் கிடைக்கிறது. கள் விற்பனை இருந்த காலத்தில் பொதுமக்கள் இத்தனை பேர் மதுவால் உடல் நலம் பாதிக்கப்படவில்லை, ஆனால் இன்று கோடிக்கணக்கான மக்கள் மதுவுக்கு அடிமையாகி செயற்கை வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படும் மது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

திமுக ஏன் கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கிறார்கள் என்றால் டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவை உற்பத்தி செய்யும் சாராய ஆலைகள் நடத்துபவர்கள் திமுகவினர் தான். கள் விற்பனைக்கு அனுமதி கொடுத்தால் அவர்களின் பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதற்காக கள்ளுக்கான தடையை நீடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில திமுகவினருக்காக கள் உற்பத்தி கெட்டுப்போகாமல் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை காரணமாக கூறி தமிழகம் முழுவதும் இருக்கும் விவசாயிகள் பலனடையும் கள் விற்பனைக்கு தொடர்ந்து தடை விதிக்கிறார்கள்.

எனவே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நாங்கள் கள் இறக்குவதை சட்டபூர்வமாக்குவோம் என அண்ணாமலை தெரிவித்தார்.

இது தென்னை விவசாயிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தான் எடுத்த சபதத்தை நிறைவேற்றும் வகையில் அண்ணாமலை தொடர்ந்து செருப்பு அணியாமல் வருவதை பார்த்த பாஜகவினர் நெகிழ்ந்து போயினர்
 

இதையும் படிங்க: பாதியில் மாட்டிய பைக் திருடன்.. விரட்டிப்பிடித்து வெளுத்த பொதுமக்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share