மூன்றாவது முறையாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு தோல்வி உறுதி.. விளாசும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.!!
அதிமுக - பாஜக கூட்டணி திமுக அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி திமுக அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
நீங்கள் பிரிவினைவாதம், வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதாக பாஜக வைக்கும் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். "அரசியல் சட்டம் தந்த கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்க குரல் கொடுப்பதும், அரசியல் சட்ட அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை வளர்க்கப் பாடுபடுவதும் எப்படி பிரிவினை அரசியலாக இருக்க முடியும்? வெறுப்பையே அரசியல் கொள்கையாகக் கொண்ட கட்சி பா.ஜ.க.. அக்கட்சி உருவாக்கிய மதக் கலவரங்கள், இனக்கலவரங்கள் இன்னமும் இந்திய வரலாற்றின் கறை படிந்த பக்கங்களாக இருக்கின்றன.
பாஜக - அதிமுக கூட்டணியை வலிமையான எதிரியாக பார்க்கிறீர்களா? மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது பற்றிய கேள்விக்கு, "இது திமுக அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான்! ஒரு முறை அல்ல; இரு முறை! 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக் கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக்கால நிகழ்வுகள் இருந்தன. தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யும் பா.ஜ.க.வையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அதிமுகவையும், மூன்றாவது முறையும் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடிப்பார்கள்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கூறுகையில், "ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் சட்டம் இயற்றும் அதிகாரம் மிக்கது. நியமனப் பதவியான ஆளுநர் பதவி என்பது ஒரு கௌரவப் பதவிதான். சட்டமன்றத்தின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பின் வாயிலாக தெளிவுபடுத்தி- மத்திய- மாநில உறவுகளில் அதற்குரிய அதிகாரம், ஒரு தபால்காரருக்குரியதுதான் என்பதைத் தொடர்ந்து திமுக சொல்லி வருகிறது. அது உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமித் ஷா இனி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார்.. பாஜக ஆட்சியும் வரும்.. ஒரு முடிவில் இருக்கும் நயினார்.!!
இதையும் படிங்க: வக்கில்லாத கோமா அரசே..! 3 பேர் இறப்புக்கு நீங்க மட்டும் தான் காரணம்.. கொதிப்பில் இபிஎஸ்..!