நாடு கடத்தும் வழக்கு... இந்திய வழக்கறிஞரை நம்பியிருக்கும் டிரம்ப்... யார் இவர்?
நாடு கடத்தல் வழக்கில் தனக்கு ஆதரவாக வாதாட இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாள் முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தினார். அதில் இந்தியர்கள் 300க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதனிடயே டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இருந்தபோதிலும் டிரம்ப் நாடு கடத்துவதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தடையை நீக்க கோரும் வழக்கில் தனக்கு ஆதரவாக வாதாட அபிஷேக் காம்ப்ளி என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இவர் அமெரிக்க நீதித்துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் Deputy Associate Attorney General பொறுப்பில் உள்ளார். இந்தியாவில் பிறந்த இவர், 3 வயது நிரம்பிய நிலையில் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்காவின் கனெக்டிகட்டின் நார்வாக் பகுதியில் தனது குழந்தை பருவத்தை கழித்த அபிஷேக், 2006ல் யூனிவர்சிட்டி ஆஃப் தி ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் Fine Arts படிப்பை முடித்தார். பின்னர் என்டர்டெயின்மென்ட் இன்டஸ்ட்ரியில் சில காலம் அவர் பணியாற்றினார்.
இதையும் படிங்க: 1 மணி நேரம் காக்க வைத்து அவமானப்படுத்திய புடின்... டிரம்பை விரக்தியாக்க ரஷ்ய அதிபரின் ராஜதந்திரம்..?
அதைதொடர்ந்து நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார். 2013ம் ஆண்டில் டைஸ் விமான தளத்தில் (Dyess Air Force) முதன்மை வழக்கறிஞராக செயல்பட்டார். சட்டங்கள் தொடர்பான நடவடிக்கையின் மேற்பார்வையாளராகவும் இருந்தார். 2014ல் டைஸ் விமான தள வழக்கறிஞர்களில் சிறந்தவர் என்ற பெயரை பெற்றார். அதே ஆண்டு பாதுகாப்பு ஆலோசகராக பதவி உதவி பெற்றார். டைஸ் விமான தளத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிக விமானப்படை வீரர்களுக்கு தேவையான சர்வீஸ்களை வழங்கும் வகையில் உயர்ந்தார்.
இவர் பொறுப்பில் இருந்தபோது தான் 9/11 தாக்குதலுக்கு நிதி உதவி செய்த அல்குவைதா பயங்கரவாதி முஸ்தபா அல் ஹவ்சாவி குவாண்டனாமோ விரிகுடாவில் வைத்து விமானப்படை பிடித்தது. அதன்பிறகு 2023 அக்டோபரில் அபிஷேக் காம்ப்ளி கன்சாஸ் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் துணை அட்டர்னி ஜெனரலாகவும், சிறப்பு வழக்கு வழக்கறிஞராகவும், அரசியலமைப்பு சார்ந்த சிக்கல்களை தீர்க்கும் பிரிவின் தலைவராகவும் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உக்ரைனில் 30 நாள் போர் நிறுத்தம்?: டிரம்பும், புதினும் என்ன பேசினார்கள்..?